இன்றைக்கு இதுதான்: ராசி பலன் 24.09.2023
மேஷம்
சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.
வெளியூர் பயணம் செல்லும் போது, எச்சரிக்கை தேவை.
ரிஷபம்
வீட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
தொழில் வியாபார ரீதியாக சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம்.
மிதுனம்
நிதானத்துடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமாகும்.
கடகம்
புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள்.
குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும்
சிம்மம்
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.
வியாபார ரீதியான பிரச்சினைகள் சற்று அதிகமாகும்.
கன்னி
பிள்ளைகள் வகையில் அனுகூலப் பலன் உண்டாகும். புதிய பொருள் ஒன்று வாங்குவீர்கள்.
மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.
துலாம்
உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப் பிரச்சினைகள் ஏற்படும்.
விருச்சிகம்
குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும்.
உடல் நலத்தில் கவனம் தேவை.
தனுசு
பிள்ளைகள் வகையில் வரவுகள் உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
மகரம்
உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.
செலவு அதிகரிக்கும்.
கும்பம்
வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும்.
கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
மீனம்
சுபசெய்திகள் வரும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
வீண் செலவை தவிருங்கள்.
- ராம்ஜி