“பைத்தியக்காரத்தனம்!”:  பாஜகவிற்கு கிருஷ்ணசாமி கடும் கண்டனம்

“பைத்தியக்காரத்தனம்!”:  பாஜகவிற்கு கிருஷ்ணசாமி கடும் கண்டனம்

நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே முதுநிலை மருத்துவர் கலந்தாய்வு இரண்டு சுற்று முடிந்திருக்கும் நிலையில், மூன்றாவது சுற்றுக் கலந்தாய்வுக்குச் சலுகையாக மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த  நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியும் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அவர்,  “21 ஆம் நூற்றாண்டின் பைத்தியக்காரத்தனமான முடிவை ஒன்றிய பாஜக அரசு எடுத்துள்ளது. இந்த அறிவிப்பால், மருத்துவர்கள் மனம் நொடிந்து போய் உள்ளனர். ஒன்றிய அரசின் இந்த முடிவு அறிவுப்பூர்வமான செயல் அல்ல. இது  மருத்துவத்துறையின் தரத்தைக் குறைக்கும் செயலாகும். சில சுயநிதி கல்லூரிகளை வாழ வைக்க மருத்துவத்துறையை அழிக்கக்கூடாது” – எனத் தெரிவித்து உள்ளார்.

Related Posts