இளையராஜா இசையில் திவ்ய பாசுரங்கள்: ஆல்பம் வெளியீடு!

இளையராஜா இசையில் திவ்ய பாசுரங்கள்:   ஆல்பம் வெளியீடு!

ஆழ்வார்களின் பாசுரங்கள் அனைவரையும் சென்று அடைய வேண்டும் என்ற  நோக்கத்தில், இசையமைப்பாளர்  இளையராஜா நாலாயிரம் பாசுரங்களில் இருந்து எட்டு பாசுரங்களுக்கு இசை அமைத்து உள்ளார். இவை, ‘திவ்ய பாசுரங்கள்’ என்னும் பெயரில்  ஆல்பமாக வெளியிடப்பட்டது.

இதற்கான நிகழ்வில் ஹைதராபாத் யூனிட்டி ஆஃப் ஸ்டாட்சு ஆலயத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர் சுவாமிகள் கலந்துகொண்டு இசை ஆல்பத்தை வெளியிட்டார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் டாக்டர் உ.வே. வெங்கடேஷ் நாலாயிரம் திவ்ய பிரபந்தங்கள் குறித்துப் பேசினார். அடுத்து சிறுமி ஆண்டாள் ஶ்ரீநிதி, ஆண்டாள் குறித்த உபன்யாசம் நிகழ்த்தினார். அடுத்து, இசை ஆல்பத்தில் இருந்து, ‘வாரணம் ஆயிரம் சூழவலம் செய்து’ என்னும் ஆண்டாள் பாசுரத்துக்கு அனிதா குஹா குழுவினர் நடனமாடினர். அடுத்து பேராசிரியர் ஞான சுந்தம் பேசினார். அடுத்து, சின்ன ஜீயர் சுவாமிகள் அருளுரை வழங்கினார்.

Related Posts