ஜெய் ஆகாஷ் நடிக்கும் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’! எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஜீ டி.வி. தொடர்!
பிரபல நடிகர் ஜெய் ஆகாஷ், தமி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். நடிப்பில் மட்டுமின்றி, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, இசை என பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்.
இவர் நடித்து இயக்கும், மாமரம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று உள்ளது.இந்நிலையில் சின்னத்திரையிலும் முத்திரை பதித்து வருகிறார் ஜெய் ஆகாஷ். பிரபலமான ஜீ டி.வியில் வரும் ஜூலை 1 முதல் ஒளிபரப்பாக இருக்கும், நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரில் நாயகனாக நடிக்கிறார். இத்தொடர், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இத்தொடரில் ஜெய் ஆகாஷூக்கு ஜோடியாக, ரேஷ்மா முரளிதரன் நடித்துள்ளார்.
இருவரும் தோன்றும் காட்சி, ப்ரமோவாக ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
லண்டனில் பிறந்து இங்கிலாந்து குடிமகனாக இருந்தாலும் கலை ஆர்வத்தால், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் ஜெய் ஆகாஷ் பாராட்டுக்கு உரியவரே.