ஈழத்தின் அழியாச் சோகத்தைச் சொல்லும், ‘ஒற்றைப் பனை மரம்’! 25ம் தேதி வெளியீடு!
ஆர்.எஸ்.எஸ்.எஸ். பிக்சர்ஸ் சார்பில் எஸ். தணிகைவேல் தயாரிக்க, ‘மண்’ படத்திற்கு விருது பெற்ற, புதியவன் ராசையாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்
‘ஒற்றைப் பனை மரம்’.
இந்தப் படத்தின் கதைக்களம் ஈழத்தில் போர் முடிவுறும் இறுதி நாட்களில் ஆரம்பித்து, சமகால சூழலைச் சொல்கிறது.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக புதியவன் ராசையா, அஜாதிகா புதியவன், நவயுகா, மாணிக்கம் ஜெகன்,தனுகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
படத்திற்கு அஷ்வமித்ரா, தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே கொண்டு இசை அமைத்திருக்கிறார்.
சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும். தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
40 சர்வதேச பட விழாக்களில் பங்கு பற்றிய இந்தத் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 க்கும் மேற்பட்ட விருதுகளை வாரிக் குவித்துள்ளது.
இப்படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள் இயல்பாக காணப்படுவதோடு இதில் நடித்துள்ளவர்களின் யதார்த்தமான நடிப்பு, இதயத்தை கணத்து போக வைக்கும் திருப்பங்கள் என்பன கதைக்குள் ஆழமாக அழைத்துச் சென்று கிளிநொச்சியில் உள்ள கிராமத்திலேயே வாழவைத்து விடுகின்றன.
‘ஒற்றைப் பனைமரம்’ வரும் 25ஆம் தேதி தமிழ்நாடு முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

