’சூரரைப்போற்று’ தீபாவளிக்கு முன் ரிலீஸ்!

சென்னை: கொரோனா தொற்று காரணமாக திரைப்படங்கள் திரையரங்கில் வெளியிடுவது சாத்திய மில்லாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் சமீபமாக  ஓடிடிதளத்தில் படங்கள்  வெளிவரத்துடங்கியுள்ளது. அந்த வரிசையில் தற்போது சூரரைப்போற்று படத்தின் ரிலீஸ் தேதியை  அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார்.

 இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. தற்போது இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவது என படக்குழு முடிவு செய்திருக்கிறது.

இந்த திரைப்படம் திரையில் வருமா? அல்லது ஓடிடியில் வருமா என்ற எதிர்பாப்பில் ரசிகர்கள் இருந்தனர். தற்போது ஓடிடியில் வெளிவரும் என அறிவித்துள்ளனர். ஏற்கனவே அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் இந்த  இத்திரைப்படம் நேரடியாக ஒளிபரப்படும் என அறிவித்திருந்த சூழ்நிலையில்’ ட்இந்திய விமானப்படையின் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் ரிலீஸ் தேதி தாமதம் ஆனது.

இந்நிலையில் தாமதத்திற்கு பின் கடந்த 23ஆம் தேதி இந்திய விமானப் படையின் தடையில்லா சான்றிதழை வாங்கிய படக்குழு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர்.  ஆகவே இன்று சூரரைப்போற்று படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூரியா சூரரைப்போற்று திரைப்படம் வரும் நவம்பர் 12ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளார்.

அடுத்த மாதம் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.  சூரரைப்போற்று ரிலீஸ் தேதி அறிவிப்பால் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்பத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

-யாழினி சோமு

Related Posts