உயிருக்கு ஆபத்து! : பிரபல இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்

னது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், முதல்வர் தனக்கு உதவ வேண்டும் என்றும் பிரபல திரைப்பட  இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

சிறிது நேரத்துக்கு முன்  அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், `என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்’ என தெரிவித்திருக்கிறார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான `800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என சீனு ராமசாமி சமீபத்தில் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related Posts