“அடி முட்டாள் அண்ணாமலை!”: காங்கிரஸ் பிரமுகர் நபில் தாக்கு!

“அடி முட்டாள் அண்ணாமலை!”: காங்கிரஸ் பிரமுகர் நபில் தாக்கு!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை ரவுடி பட்டியலில் இருப்பதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறிருந்தார்.  இதற்கு செல்வபெருந்தகை,  “தான் கூறியதை அண்ணாமலையால்  நிரூபிக்க முடியுமா?  அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது அவதூறு வழக்குகள் தொடருவேன்” என்று பதில் அளித்து இருந்தார்.

தவிர அண்ணாமலைக்கு எதிராக புகாரளிக்க காங்கிரஸ் தரப்பில் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சித் துறை தலைவர் எஸ்.நபில் அகமது,  “அடி முட்டாள் அண்ணாமலை அவர்களே!” என்கிற தலைப்பில், அண்ணாமலைக்கு  பகிரங்க கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அந்த கடிதம்:

“அடி முட்டாள் அண்ணாமலை அவர்களே!

ஒருவர் மீது வழக்கு இருந்ததாலேயே அவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத நீ எல்லாம் எப்படி ஐ.பி.எஸ் ஆன?

குற்றத்தின் உண்மை தன்மை என்ன? குற்ற வழக்குகளின் பின்னனி என்ன? குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதா? வழக்கின் தற்போதைய நிலை என்ன? என்பதைப் பற்றி அறிவில்லாத நீ எங்கள் தலைவரை நோக்கி கேள்வி கேட்கலாமா?

சுதந்திரப் போராட்டத்தில் தேச பிதா காந்தியடிகள் தொடங்கி ஜவஹர்லால் நேரு, கொடிகாத்த குமரன், முண்டாசு கவி பாரதியார் என அனைவரின் மீதும் வழக்குகள் இருந்தன. அவையெல்லாம் அப்போதைய கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்ததாலும், நீதியின் பக்கம் நின்றதாலும் தானே தவிர உன் கட்சியில் உள்ள சில்லறைகளைப்போல் வழிப்பறி செய்தும், பிறரை மிரட்டியும், கொலை செய்தும் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நீ கூறிய பொய்யான குற்றச்சாட்டுகள் மெய்யெனில் தேர்தலிலேயே போட்டியிட இயலாது என்ற அறிவும் உனக்கு இல்லை. எங்கள் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றியும் பெற்றுள்ளது.

வார்டு கவுன்சிலர் ஆவதற்குக் கூட உனக்குத் தகுதி இல்லை என மக்கள் உன்னை நிராகரித்தது தான் மக்கள் மன்றத்தில் உனக்குக் கிடைத்த செருப்படி. எவ்வளவு அவதூறு கருத்துகளை நீ எம் தலைவர் மீது சுமத்தினாலும் பெருந்தன்மையுடன் உன்னை மன்னித்தார். ஆனாலும் சில ஜந்துக்களை எதனைக் கொண்டும் திருத்த முடியாது என்பது உன் ஆணவ பேச்சால் வெளிப்பட்டுள்ளது.

விரைவில் சட்டத்தின் முன் கைகட்டி பதில் சொல்லும் போது எம் தலைவரின் வரலாறு என்ன என்பது அப்போது உனக்கு புரியும்

உன்னுடைய மூதாதையர்களான சங்கிகள் இந்திய திருநாட்டை சுதந்திர போராட்டத்திலும் காட்டிக் கொடுத்தார்கள் இன்றும் காட்டிக்கொடுக்கிறார்கள். அதுவே உன்னுடைய வரலாறு எம் தலைவரின் வரலாறு என்ன என்பது
விரைவில் சட்டத்தின் முன் கைகட்டி நீ பதில் சொல்லும்போது உனக்கு புரியும்!” – இவ்வாறு நபில் அகமது தெரிவித்து உள்ளார்.