தனுஷின் ‘ராயன்’ டத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் ஏன்?!
தனுஷ் நடிக்கும் ஐம்பதாவது படமான ’ராயன்’ திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரே இயக்குவதால், எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் பிரமோசன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதுய
இந்த நிலையில் படத்துக்கு சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளதால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம், யு/ஏ சான்றிதழ் பெற படக்குழு முயற்சித்தாக செய்திகள் வந்தன. ஆனால், “படக் காட்சிகள் சிறப்பாக உள்ளன.. காட்சிகளை மாற்றினால் கதையோட்டம் மாறுபடும்.. ஆகவே ஏ சான்றிதழே பரவாயில்லை” என்று படக்குழு தெரிவித்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்லது.
படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள்.