ஆர்.கே. வெள்ளி மேகம் : விமர்சனம் 

ஆர்.கே. வெள்ளி மேகம் : விமர்சனம் 

ராமச்சந்திரன் நடித்து தயாரிக்க சைனு சாவக்காடன் இயக்கத்தில் வரும் 12ம் தேதி வெளியாகி இருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம், ‘ஆர்.கே. வெள்ளி மேகம்’ ஆர்.கே. வெள்ளி மேகம்’.

ஆர்.கே. பிரபலமான திரைப்பட இயக்குநர். அவரிடம் இரு இளைஞர்கள் ஒரு காதல் கதையைச் சொல்கிறார்கள். அதை த்ரில்லர் கதையாக மாற்ற ஆலோசனை சொல்கிறார் ஆர்.கே.

அதன்படி கதையோட்டம் மாறுகிறது.

ஆர்.கே.வின் பேச்சு, நடவடிக்கை எல்லாம் வித்தியாசமாக இருப்பதை, அந்த இரு இளைஞர்களும் கவனிக்கிறார்கள். “இவர், ஏதோ ஒரு அமானுஸ்ய சக்தியிடம் சிக்கி இருக்கிறாரோ” என்று சந்தேகப்படுகிறார்கள். ஆகவே அவரை வேவு பார்க்கிறார்கள்.

ஆர்.கே. வாழ்க்கையில் நடந்த சில திடுக் சம்பவங்கள் தெரிய வருகின்றன…

தனது அம்மாவை கொன்ற அப்பா, தானும் தற்கொலை செய்து கொண்டாரே என சோகத்திலேயே இருக்கிறார் ஆர்.கே. அதே நேரம், திரைப்படங்களை இயக்கி பிரபலமாகவும் ஆகிவிடுகிறார்.

தன் படங்களில் நடித்த நடிகை ஒருவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அது அந்த நடிகைக்குப் பிடிக்கவில்லை.

இதற்கிடையே அந்த பெண் கொல்லப்படுகிறாள். கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்கிறார் ஆர்.கே.

அதன் பிறகு எப்போதும் மது போதையில் இருக்கிறார்.. வினோதமாக நடந்துகொள்கிறார். இந்த நிலையில்தான இரு இளைஞர்களும் அவரிடம் கதை சொல்ல வருகிறார்கள். ஆர்.கே.வைவேவு பார்க்கிறார்கள்.

ஆர்.கே. வாழ்க்கையில் உண்மையில் நடந்தது என்ன.. அவர் அமானுஸ்ய சக்திகளின் பிடியில் இருக்கிறாரா.. அதிலிருந்து மீண்டாரா என்பதுதான் கதை.

விசித்திரன்ஆதேஷ் பாலா ரூபேஸ்வரன் கொட்டாச்சி சர்மிளா

சின்ராசு உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர். தயாரிப்பாளர் ராமச்சந்திரனும் ஒரு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

இயக்குநர் ஆர்.கே.தான் நாயகன்…அமானுஸ்ய பிடியில் சிக்கி தவிப்பது, சண்டைக் காட்சியில் அதிரடி காட்டுவது என்று அசத்தி இருக்கிறார்.

அதே போல கதை சொல்லும் இளைஞர்களாக வரும் விஜய் கௌரீஸ், ரூபேஸ்வரன் இயல்பாக நடித்து இருக்கின்றனர். தங்களது கதை படமாகுமா என்கிற பதைபதைப்பு, இயக்குநருக்கு என்ன ஆனது என்கிற தேடல் என தங்கள் பங்கினை சரியாகச் செய்து இருக்கிறார்கள்.

த்ரில்லர் என்றால் ஒரே மாதிரி இருக்கும். ஆனால் வித்தியாசமான த்ரில்லர் கதையை அளித்து இருக்கிறார் யது கிருஸ்ணன் ஆர்.

கோவை பாலுவின் திரைக்கதை, தெளிந்த நீரோடை போல செல்கிறது.

டான்ஸ் அலெக்ஸின் ஒளிப்பதிவு, சாய் பாலனின் இசை,

ஹரி ஜி நாயரின் எடிட்டிங் ஆகியவை படத்துக்கு பலம்.

ஆரம்பத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை, அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக இயக்கி இருக்கும் சைனு சாவக்காடனுக்கு பாராட்டுகள்.

த்ரில்லர் பட விரும்பிகள் ரசித்துப் பார்க்கலாம்.

Related Posts