இந்தியாவின் மிகப்பெரிய காதல் காவியம் “லவ் & வார்”. 2027 ஜனவரி 21 வெளியீடு !!
இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் கனவுப் படைப்பான “லவ் & வார்” (LOVE & WAR) படத்தின் ரிலீஸ் தேதி குறித்த மெகா அப்டேட் வெளியாகி, சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது!
ஜனவரி 21-ல் அதிரடி ரிலீஸ்!
ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் என பாலிவுட்டின் டாப் ஸ்டார்கள் மூவர் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த காதல் காவியம், 2027 ஜனவரி 21, வியாழக்கிழமை அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குடியரசு தின வார இறுதியை குறிவைத்து களமிறங்கும் இந்த படம், பாக்ஸ் ஆபீஸில் புதிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிரமான காதல்… பிரம்மாண்டமான காட்சி!
பன்சாலியின் படங்கள் என்றாலே கண்களைக் கவரும் வண்ணமயமான காட்சியமைப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், “லவ் & வார்” திரைப்படம் வெறும் காதலையும் போரையும் மட்டும் பேசாமல், ஆழமான உணர்ச்சிகள் மற்றும் கண்ணைக் கவரும் பிரம்மாண்டத்துடன் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த காதல் காவியமாக உருவாகி வருகிறது.
பான்-இந்தியா ட்ரீட்!
இந்தி மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்தியாவின் மிகப்பெரிய காதல் காட்சி அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க பன்சாலி இப்போதே தயாராகிவிட்டார்.
2027-ன் தொடக்கத்திலேயே காதலில் நனையத் தயாராகுங்கள்! “லவ் & வார்” படத்தின் இந்த மாஸ் அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
