“இந்தியன் 2 படத்தில், எவ்வளவு நேரம் வருகிறர் கமல்?”: ஷங்கர் தகவல்

“இந்தியன் 2 படத்தில்,  எவ்வளவு நேரம் வருகிறர் கமல்?”: ஷங்கர் தகவல்

ஷங்கர் இயக்கத்தில், கமல் நாயகனாக நடிக்கும் இந்தியன் 2 படம், வரும் 12ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

இப்படம் இந்தியில் ‘ஹிந்துஸ்தானி 2’ என்றும், தெலுங்கில் ‘பாரதியிடு 2’ என்றும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சில ஒன்றில் பேசிய கமல் “ ‘இந்தியன் 2’ படத்தை விடத் எனக்கு ‘இந்தியன் 3’ திரைப்படம்தான் ரொம்ப பிடிக்கும். அந்தப் படத்தின் கதை காரணமாகத்தான் ‘இந்தியன் 2’ படத்திலேயே நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்றார்.

பிறகு அதற்கு, “அப்பா, அம்மா இருவரையுமேதான் குழந்தைக்குப் பிடிக்கும். எனக்கும் இரு பாகங்களும் பிடிக்கும்” என்று விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன் குறைந்த நேரம் மட்டுமே வருகிறார் என்று ஒரு தகவல் உலவ ஆரம்பித்தது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ஷங்கர் பதில் அளித்தார்.

அவர், ” படம் முழுவதும் கமல் வருவார். அவர் திரையில் இல்லாதபோதிலும் எல்லாக் கதாபாத்திரமும் அவரைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

‘இந்தியன் 3’ படத்தில் சேனாபதியின் தந்தை கமல் கதாபாத்திரமும் இடம்பெறும் என்றும் ஒரு தகவல் ஏற்கெனவே வெளியானது.

ஆகவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது.

Related Posts