ரஜினியின் ‘கூலி’ அப்டேட்:  இணையும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பிரபலம்!

ரஜினியின் ‘கூலி’ அப்டேட்:  இணையும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பிரபலம்!

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்க,  ரஜினி நாயகனாக  நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’.  படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கூலி படத்தின் அறிவிப்பிற்கான ப்ரோமோ வெளியானது முதல் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ப்ரோமோவில் இடம்பெற்ற டிஸ்கோ என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த ப்ரோமோ மூலம் இப்படம் தங்கம் கடத்தல் தொடர்பான கதை என தெரிய வருகிறது.   சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் மேலும் பல்வேறு திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் சவுபின் ஷஹீர் கூலி படத்தில் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து யுள்ளது. சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவரது கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளது. அவர் ‘தயல்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர், கும்பலாங்கி நைட்ஸ், மஞ்சும்மல் பாய்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ்  ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

Related Posts