‘டங்கி” படப் பாடலைப் பற்றிய ரசிகர்களின் கேள்விகளுக்கு ஷாருக்கான் பதில் !!

‘டங்கி” படப் பாடலைப் பற்றிய ரசிகர்களின் கேள்விகளுக்கு ஷாருக்கான் பதில் !!

டங்கி படத்தின் முதல் மெல்லிசைப் பாடலான “டங்கி டிராப் 2″ லுட் புட் கயா சமூக ஊடகங்களின் வைரலாகி வருகிறது.   இதனையொட்டி பாடல் குறித்த தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் சுவாரஸ்யமான பதில்களை தந்தார் !!

மிகவும் எதிர்பார்க்கப்படும் டங்கி படத்தின் டிராப் 1 மற்றும் அதன் போஸ்டர்கள் பார்வையாளர்களை இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இதயம் கவரும் புதிய உலகிற்கு அழைத்துச் சென்றது. ரசிகர்களை மேலும் மகிழ்விக்கும் வகையில் படத்தின் முதல் பாடல் வெளியானது.இதைக்  கொண்டாடும் ரசிகர்கள் ​​ டங்கி டிராப் 2 லுட் புட் கயாவைப் பற்றி வெவ்வேறு கேள்விகளைக் கேட்டனர்.  அதே நேரத்தில்சாருக்கான்  தனது நகைச்சுவையான மற்றும் அனைவரையும் ஈர்க்கக்கூடிய குறும்புத்தனமான பதில்களை தந்தார்.

ஒரு ரொமாண்டிக் டிராக்கை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர் கேட்ட கேள்வி

லுட் புட் கயே எங்கள் மனதை திருடி விட்டது இது போல் டங்கியில் அரிஜித்தின் ரொமான்ஸ் பாடல் ஏதும் வேறு  பாடல் உள்ளதா ?”எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த சாருக்கான்  ” லுட் புட் கயா வந்துவிட்டது வருகிறது வருகிறது காதல் பாடல் பின்னால் வருகிறது. அதுவரை இந்த அழகான ரொமான்ஸில் ராஜ்குமார் ஹிரானி உங்களைக் காத்திருக்க வைப்பார். புதிய வருடத்தில் புதிய பாடலுடன் காதலும் வரும். #டங்கி” என்றார்

58 வயதிலும் சிறகடிக்கும் எனர்ஜி குறித்த சாருக்கான்  பதில்’’

இதே போன்று  கேள்வி கேட்ட மற்றொரு ரசிகர், இப்போது தான் லுட் புட் கயா பார்த்தேன், தெறிக்கும் மின்னல் வேகமும், எனர்ஜியுமாக குழந்தை போலான துள்ளலை 58 வயதில் எங்கிருந்து பெறுகிறீர்கள்? என்றார்.

இதற்கு பதிலளித்த சாருக்கான்  “எனக்கு வீட்டில் ஒரு குழந்தை உள்ளது. அதனால் தான் அந்த அப்பாவித்தனத்தையும் ஆற்றலையும் பாடல்களில் வைக்க முயற்சிக்கிறேன்.’ டங்கி’ என்றார்.

அரிஜித் சிங் மற்றும் ப்ரீதம் மீதான அன்பை வெளிப்படுத்திய சாருக்கான்

அடுத்ததாக கேள்வி கேட்ட ரசிகர் , அரிஜித் + ப்ரீதம் கூட்டணியில் இந்தப் பாடல் பற்றி உங்கள் கருத்து என்ன?

இதற்கு பதிலளித்த அவர் இருவரும்  பெரிய தாதா மற்றும் சிறிய தாதா போன்றவர்கள். ஒரு நடிகராகவும் நண்பராகவும் எனக்கு அவர்கள் உருவாக்கும் மாயாஜால பாடல்கள் எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.

Related Posts