கள்ளச்சாராய காட்சிகளை கண்முன் நிறுத்தும் ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ திரைப்படம்!
‘பிளான் த்ரீ ஸ்டுடியோஸ்’ சார்பில், ரோஜி மேத்யூ – ராஜு சந்திரா தயாரிக்க, மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம், ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள்’. கதையின் நாயகன் நாயகியாக அப்புக்குட்டி – ஐஸ்வர்யா அனில் நடித்துள்ளனர். ஸ்ரீஜா ரவி, ரோஜா மேத்யூ, சந்தோஷ் சுவாமிநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
ராஜு சந்திரா இயக்கும் முதல் தமிழ்ப்படம் இது. ஆனால் ஏற்கெனவே மலையாளத்தில் , ‘ஜிம்மி இ வீட்டின்ட ஐஸ்வர்யம்’, ‘ஐ ஆம் ஏ பாதர்’ ஆகிய படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்தவர் இவர். படத்துக்கு ஒளிப்பதிவும் இவரே.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
இப்படத்தில் சாராயத்தால் குடும்பத்தில் ஏற்படும் சீரழிவுகள் குறித்த காட்சிகள் உள்ளன. இதை, படத்தின் டீசர் அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய கொடுமை நடந்திருக்கும் சூழலில், மது கொடுமை குறித்து பேச வரும் இப்படம் கவனத்தை ஈர்த்து உள்ளது.
டீசர்:
பிறந்தநாள் வாழ்த்துகள் டிரெய்லர்