sevakar: “நீண்ட நாள் ஷூட்டிங் என்பதால் படம் நன்றாக வந்துவிடாது!”: நச்சடி கொடுத்த பாக்யராஜ்!
சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல், ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிக்க, சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ள படம், ‘சேவகர்’. இப்படத்தின் ட்ரெய்லர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடந்தது..
நிகழ்வில்இயக்குநர் கே பாக்யராஜ் பேசும்போது, “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பல ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு மீண்டும் இங்கே வந்திருக்கிறார். இந்தப் படத்தை 25 நாட்கள் சிரமப்பட்டு முடித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு செய்வது எத்தனை நாட்கள் என்பது முக்கியமல்ல. 16 வயதினிலே படம் கூட 32 நாட்களில் எடுக்கப்பட்டது தான். எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது. படப்பிடிப்பு எவ்வளவு நாட்கள் என்பதை வைத்துப் படத்தைப் பற்றி நாம் முடிவு செய்ய முடியாது.சமீபத்தில் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்திருந்தேன். படத்தின் பெயர் 35 .அதில் பெரிய கதாநாயகனா பெரிய நடிகர்களோ கிடையாது. குழந்தைகள் சம்பந்தப்பட்ட கதை .சின்ன சின்ன சராசரியான நடிகர்களை வைத்து தான் எடுத்திருந்தார்கள். படம் இப்போது வெளியாகி பெரிய வெற்றி பெற்றுள்ளது. பெரிதும் பேசப்படுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் மக்கள் நல்ல கதையைப் பார்க்கிறார்கள் . அந்தப்படம், விரைவில் தமிழில் வெளியாகும்.
நல்ல படமாக இருந்தால் தெலுங்கு ரசிகர்களும் பார்ப்பார்கள். தமிழ் ரசிகர்களும் பார்ப்பார்கள்” என்று கூறினார்.