vaazhai: ‘டீச்சர், இஸ்லாமியர்…’: சர்ச்சைகளுக்கு மாரி செல்வராஜ் பதில்!

vaazhai: ‘டீச்சர், இஸ்லாமியர்…’:  சர்ச்சைகளுக்கு மாரி செல்வராஜ் பதில்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம்,  ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிநடை போடுகிறது.  ‘ 5 கோடி பட்ஜெட்டில் உருவாகி 40 கோடிக்கும் அதிகமான வசூல் பெற்ற  லாபகரமான படம்’ என்று திரையுலகினர் கொண்டடுகின்றனர்.

அதே நேரம் படம் குறித்து சிலர் சர்ச்சைகளையும் கிளப்பினர்.

. இந்நிலையில், நேற்று நடைபெற்ற வெற்றி விழாவில் மாரி செல்வராஜ், சர்ச்சைகளுக்கு பதில் அளித்தார்.

அவர்,  “டீச்சர் மீது மாணவனுக்கு இருக்கும் ஈர்ப்பை ஆபாசம் என சிலர் விமர்சித்தார்கள். அது இயல்பான உணர்வு. தவிர,  கிளைமேக்ஸ் காட்சியில் ஊரே கதறி அழும் போது அந்த பூங்கொடி டீச்சர் எங்கே போயிட்டாங்க  என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

கதைப்படி டீச்சரின் மடியில் தான் சிவனணைந்தன் படுத்துக் கொண்டு அழுவது போன்ற காட்சியை யோசித்து இருந்தேன்.  அந்த நேரத்தில்,  டீச்சராக நடித்த நிகிலா விமலின் கால்ஷீட் கிடைக்கவில்லை.அந்த லாரி விபத்து நடந்தபோது, விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள் குறித்து நான் சொல்லவில்லை என்கிறார்கள்.  நான் என்னுடைய பார்வையில் மட்டுமே படத்தை உருவாக்கி உள்ளேன். . இஸ்லாமிய சகோதரர்கள், ஜாதி மத பேதம் பார்க்காமல் உதவினர்.. இப்படி உதவிய  அத்தனை ஊர் மக்களுக்கும் இந்த மேடையில் நன்றி சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். சொல்லப்போனால், இத்தனை வருடம் கழித்து… வாழை படம் வந்த பிறகுதான் இஸ்லமிய மக்கள் செய்த உதவி பற்றி பலரும் பேசுகிறார்கள். அதற்குக் காரணமாக வாழை அமைந்துள்ளது” என்றார் மாரி செல்வராஜ்.

அதோடு, “சிலருக்கு வாழை புரியவில்லை என்றும் வாழை பிடிக்கவில்லை என்றும் கூறுகின்றனர். சிவனணைந்தானின் கதையும் இன்னமும் அவனுக்குள் சொல்லக் கூடிய கதைகளும் வலியும் இருக்கின்றன. அதை வாழை 2வாக விரைவில் எடுப்பேன்” என்றும் மாரி செல்வராஜ் பேசினார்.

Related Posts