கோ.ப.செ.: திருநங்கைகளின் வலியைச் சொல்லும் முதல் பாடல்..!
தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி உருவாக்கத்தில், ஏகன் அறிமுக நாயகனாக நடிக்கும் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’, வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. அருளானந்து – மாத்யூ தயாரித்திருக்கும் இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா, சத்யா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
படம், வரும் 2ம் தேதி, வெள்ளிக்கிழமை, உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்திலிருந்து, ‘காத்திருந்தேன்’, ‘பொன்னான பொட்டப்புள்ள’ என்ற பாடல்கள் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில், ‘தேவதை’ என தொடங்கும் புதிய பாடல் இன்று வெளியாகி உள்ளது. இதை ஏகாதேசி எழுதி உள்ளார்.
பொதுவாக, திரைப்படங்களில், திருநங்களை நகைச்சுவை என்கிற பெயரில் கிண்டலடிப்பதும், ஆபாசமாக காண்பிப்பதுமே வழக்கமாக இருக்கிறது. பாடல்களில் கோரஸில் பயன்படுத்துவது அப்போதும்கூட அவர்களை தரம் தாழ்த்துவது என்பதே வழக்கம்.
முதன் முதறையாக, திருநங்கைகளின் வலியைச் சொல்லும் பாடலாக, ‘தேவதை…’ பாடல் உருவாகி இருக்கிறது. “இப்பாடலை உலகமுழுதுமுள்ள திருநங்கைகளுக்கு சமர்ப்பிக்கிறேன்” என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்து உள்ளார்.
உற்சாகமான பாடல் என்றாலும், அதன் உள்ளீடாக திருநங்கைகளின் சோகத்தையும் அதே நேரம் அவர்கள் அந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு எழும் தன்னம்பிக்கையையும் சொல்வதாக பாடல் வரிகள் அமைந்துள்ளன.
இப்பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாடல் வீடியோ:
Dhevathai Video Song |Kozhipannai Chelladurai