நட்டி நட்ராஜின் புதிய பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா

நட்டி நட்ராஜின் புதிய பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா

ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி – நட்ராஜ் நடிக்கும் சீசா படத்தின் போஸ்டரை,  திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்.

விடியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் கா.செந்தில் வேலனின் கதை மற்றும் தயாரிப்பில், குணா சுப்பிரமணியம் திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம்,  சீசா.  நாயகர்களாக நட்டி நடராஜ் மற்றும் நிஷாந்த் ரூசோ நாயகியாக பாடினி குமார் நடிக்கின்றனர்.

நிழல்கள் ரவி, ஜீவா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.  ஒளிப்பதிவு பெருமாள் மற்றும் மணிவண்ணன்.  சரண்குமார் இசையமைக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் தெரிவிக்கும்போது, “இதுபுதுமையான கதைக்களத்தில் கிரைம் திரில்லராக உருவாகி உள்ளது” என்றார்.

இந்நிலையில், விரைவில் வெளிவரவிற்கும் “சீசா” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்.

Related Posts