puthuyugam tv: பிரபல கோயில்கள் நெய்வேத்தியத்தை வீட்டிலேயே “ருசிக்கலாம் வாங்க” !

puthuyugam tv: பிரபல கோயில்கள் நெய்வேத்தியத்தை வீட்டிலேயே   “ருசிக்கலாம் வாங்க” !

பல்வேறு சுவையான நிகழ்ச்சிகளைத் தரும் புதுயுகம் தொலைக்காட்சியில், ‘ருசிக்கலாம் வாங்க’ நிகழ்ச்சியும் அனைவரையும் கவர்ந்திருப்பதை அறிவீர்கள்.

வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த, சமையல் நிகழ்ச்சியான இதில்,  விதவிதமான உணவு வகைகளை செய்யும் முறையை  சிறப்பாக சொல்லித் தருபவர், யோகாம்பாள் சுந்தர்.

தற்போது இந்த நிகழ்ச்சியில், கோவில், கோவில் சார்ந்த முக்கிய தகவல்கள் – குறிப்பாக – அங்கு இறைவனுக்கு படைக்கப்படும் சுவையான நெய்வேத்தியம் குறித்தும் ‘திருத்தலமும் திருவருளும்’ என்ற தலைப்பில் வழங்குகிறார்.

இதில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் நேரடியாக அதன் தொகுப்பாளர் மீனாட்சியுடன் பங்கேற்று பல அரிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தோறும் மதியம் 12.30 மணிக்கு “ருசிக்கலாம் வாங்க” நிகழ்ச்சியில் “திருத்தலமும் திருவருளும்” என்ற தலைப்பில் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Related Posts