திரைவிமர்சனம்: நேற்று இந்த நேரம்

 திரைவிமர்சனம்: நேற்று இந்த நேரம்

ஷாரிக்ஹாசனும், ஹரிதாவும் காதர்கள். அவர்களது  காதல் மூன்றாம் ஆண்டை தொட்ட தினத்தைக் கொண்டாட திட்டமிடுகின்றனர். அதன்படி, நண்பர்களுடன் ஊட்டிக்கு டூர் சென்று கொண்டாட முடிவு செய்கின்றனர்.

ஊட்டியில் சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஷாரிக் ஹாசன் காணாமல் போகிறார். தொடர்ந்து அவருடைய நண்பரும் காணாமல் போகிறார்.

இருவரும்  திடீரென காணாமல் போனது எப்படி,  அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஷாரிக்ஹாசன், பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார்.  குறிப்பாக காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்து உள்ளார்.    அதிரடி ஆக்சன் காட்சிகளிலும் தூள் பரத்தி இருக்கிறார்.

நாயகி ஹரிதாவும் இயல்பாக நடித்து உள்ளார்.  குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வித்தியாசமான நடிப்பால் நம்மை கவர்கிறார்.

நண்பர்களாக வரும் மோனிகா, காவியா, திவாகர் குமார், நிதின் ஆகியோரும் ரசிக்கும்படி நடித்து உள்ளனர். குறஇப்பாக  தபோலீஸ் விசாரணையை எதிர்கொள்ளும் காட்சியைச் சொல்லலலாம்.

கெவின் இசை படத்திற்கு பலம் என்றாலும் பின்னணி இசையும் சிறப்பு.நான்- லீனியர் பாணியில், சிறப்பாக படத்தை எடிட் செய்து கவனத்தை ஈர்க்கிறார் எடிட்டர் கோவிந்த்.

ஊட்டியை அதன் குளிர்த்தன்மை மாறாலம் படம் பிடித்து நமக்குத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஷால்.

வெறும் காதல், நட்பு என்று மட்டும் இல்லாமல், போதை மற்றும் நண்பர்கள் பிரச்சனையைச் சொல்லி  விழிப்புணர்வு பாடமாக அளித்து இருக்கிறார்  இயக்குனர் சாய் ரோஷன் கொடுத்துள்ளார்.

யாரும் எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ் அதிர்ச்சி அடையை வைக்கிறது.

இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.