“ஒரு விரல் புரட்சி!”: தயாரிப்பாளர் சிங்காரவேலன் சபதம்!
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.
தேனாண்டாள் ராமசாமி (எ) முரளி தலைமையில், ‘தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி’ சார்பாக சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோரும், டி.ராஜேந்தர் தலைமையிலான, ‘தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி’ சார்பில் பி.டி.செல்வகுமார், ‘அடிதடி’ முருகன் உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர்
இவர்களை தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு பி.எல்.தேனப்பன், இரு துணைத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக சிங்காரவேலன், கதிரேசன், மதியழகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தலைவர் பதவியை காட்டிலும் துணை தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், தயாரிப்பாளர் சிங்காரவேலனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்:
அணி அமைத்து சிலர் போட்டியிடும்போது சுயேட்சையாக நீங்கள் களம் இறங்குவது ஏன்?
இந்த சங்கத்தில் குறிப்பிட்ட சில வருடங்கள் நிர்வாகம் சரிவர நடைபெறவில்லை. இதற்கு முன் நடிகர் விசால், தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தார். ‘ஏற்கெனவே நிர்வாகத்தில் இருந்தவர்கள் சரியாக செயல்படவில்லை!’ என்று குற்றம் சாட்டித்தான் அவர் வென்று பதவியில் அமர்ந்தார். ஆனால் அவரும் நிர்வாகத்தில் படுதோல்வி அடைந்தார். சங்க நிதி அனைத்தும் காலியானது அவரது காலத்தில்தான்.
இதையெல்லாம் எதிர்த்து தயாரிப்பாளர்கலுக்காக, ஒரு உறுப்பினர் என்ற முறையில் கேள் வி எழுப்பினேன். இதற்கு அப்போதைய நிர்வாகத்தினர் உரிய பதில் அளிக்கவில்லை.
அதனால்தான், நானே தேர்தலில் போட்டியிட்டு நிர்வாகத்திற்கு வந்து, சில விசயங்களை செய்து காட்ட விரும்பினேன். இதன் மூலம், ‘ நிர்வாகம் இப்படித்தான் இருக்கணும்’ என்று எடுத்துக்காட்டவே போட்டியிடுகிறேன்.
இருஅணிகள் போட்டியிடும்போது, எதிலும் நீங்கள் இணையாமல் தனித்து போட்டியிடுவது ஏன்?
இரு அணிகளிலும் போட்டியிடுபவர்கள் பெரும்பாலு், சங்கத்தை வைத்து பிழைப்பவர்கள்தான். தங்கள் பிள்ளைகள் சினிமாவில் பிரச்சினைகளை சந்திக்கக்கூடாது என்கிற சுயநலமே அவர்களது எண்ணம். ஆனால் தயாரிப்பாளர்கள் நலத்திற்காக நான் சில புரட்சிகரமன திட்டங்களை வைத்துள்ளேன். ஒருவிரல் புரட்சி போல, நான் அதைச் செய்வேன்! அதற்காகவே சுயேட்சையாக போட்டியிடுகிறேன்.
துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பைவ் ஸ்டார் கதிரேசன் பரவலான ஆதரவு பெற்றிருக்கிறார் என்று ஒரு கருத்து நிலவுகிறதே!
பைவ் ஸ்டார் கதிரேசன், தயாரிப்பாளர்களின் ஆதரவு பெற்றிருந்தார் என்பது உண்மையே. தாணு சார் பீரியடில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார். தவிர கே.ஆர். டீம் முழுதும் தோற்றபோது, அதில் இவர் மட்டு் வெனஅறு, கடந்த முறை செகரட்டரி ஆனார்.
அப்போதுதான் இவரது உண்மை முகம் அனைவருக்கும் தெரிந்தது. செகரட்டரி பதவி என்பது மிக சக்தி மிக்க பதவி. ஆனால் இவர் அப்பதவியை வைத்து சங்கத்தை நாசமாக்கினார்.
அப்போது தலைவர் விசால் மீது பல புகார்கள் கூறப்பட்டன. அரசாங்கத்தை பகைச்சுக்கிட்டார், பொதுக்குழு நடத்தலை , சங்க நிதியை காலி செய்துவிட்டார்.. இப்படி! அப்போது செகரட்டரியாக இருந்த பைவ் ஸ்டார் கதிரேசன், செகரட்டரி பொறுப்பில் இருந்துகொண்டு, இதையெல்லாம் வேடிக்கைதான் பார்த்தார்.
ஆகவே தற்போது அவர் மீது தயாரிப்பாளர்கள் எவருக்கும் நம்பிக்கை கிடையாது.
பிறகு அவர் எந்த நம்பிக்கையில் களத்தில் நிற்கிறார்..?
இப்போது அவர், ‘விசாலிடம் நான் பலமுறை சொல்லியும் அவர் கேட்கவில்லை’ என்று தப்பிக்கப் பார்க்கிறார். . அப்போதே இதை வெளிப்படையாக சொலலி, பதவி விலகியிருக்கலாமே..! இதனால் தயாரிப்பாளர்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டு, நல்ல தீர்வு கிடைத்திருக்குமே! விசாலுக்கு நிர்வாகம் தெரியவில்லை… அதை இவர் சரிப்படுத்தி இருக்கலாமே! எல்லாவித கோளாறுகளுக்கும் சாட்சியாக இருந்துவிட்டு இப்போது, தனக்கு சம்பந்தமில்லை என அவர் கூறுவதை யாரும் நம்பவில்லை.
அது மட்டுமல்ல.. படமே ரிலீஸ் செய்யாமல், தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், அவசர அவசரமாக பாண்டிச்சேரியில் ஒரே காட்சி படத்தை ரிலீஸ் செய்தார். இதிலிருந்தே இவர் ஏதோ பயங்கர திட்டத்துடன் வருவது போல இருக்கிறது என தயாரிப்பாளர்கள் பயப்படுகிறார்கள்.
நீங்கள் அளிக்கும் வாக்குறுதிகள் என்னென்ன?
இந்த பதவியே இரு வருடங்கள்தான். ஆனால், ‘நலிந்த தயாரிப்பாளர்களுக்கான உதவித்தொகையை ஆறு மாதம் கழித்து கிடைக்கச் செய்வோம்’ என்றெல்லாம் என்கிறார்கள்.
ஆனால் உடனடியாக சங்க வருவாயை பெருக்க என்னிடம் திட்டங்கள் உள்ளன. வருடத்துக்கு ரூ. 30 கோடியை சங்கத்துக்கு வருமானமாக ஈட்ட முடியும். இதில் ரூ.15 கோடியை சேமித்து, மீதி ரூ.15 கோடியை தயாரிப்பாளர்களுக்கு உதவ முடியும். இதற்கான பட்ஜெட் தயாரித்து உள்ளேன். இதை தயாரிப்பாளர்களுக்கு அனுப்புகிறேன்.
தவிர ஏற்கெனவே குற்றச்சாட்டில் சிக்கிய நிர்வாகிகள் மீது கவனம் செலுத்தாமல், அரசிடம் போராடி திரைத்துறையை தொழிலாக அங்கீகரிக்கச் செய்வேன். இதன் மூலம், படம் தயாரிக்க வங்கிக்கடன் பெற முடியும். இப்படி பாஸிடிவான அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நலம் பயக்கும் திட்டங்களை வைத்துள்ளேன்.
சுயேட்சையாக போட்டியிடும் நீங்கள் வெற்றி பெற்றால், புது நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடியுமா?
நிச்சயம் முடியும். நான் அனைத்து தயாரிப்பாளர்களுக்குமாக உழைப்பேன். புதிய நிர்வாகிகள் யாருடனும் எனக்கு பகை கிடையாது. அவர்களுடன் இணைந்து செயல்படுவேன். மோதல் போக்கே இருக்காது.
– கதிர்