“முன்னணி நடிகர்களின் சம்பளம் குறைப்பு!” :  தயாரிப்பாளர் ராமசாமி முரளி அதிரடி பேட்டி!

வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ராமசாமி முரளி தலைமையில்,  ‘தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி’  போட்டியிடுகிறது. இந்த அணி சார்பில் துணைதலைவர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தலைமையில் நிர்வாக்குழு வேட்பாளர்கள் மதுரையிலுள்ள தயாரிப்பாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து  தலைவர் வேட்பாளர் ராமசாமி முரளி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி’

“தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதிநிலை மோசமாக உள்ளது,  நிறைய திரைப்படங்கள்   முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை திரையிட முதற்கட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

முன்னணி நடிகர்களின் சம்பள குறைப்பு குறித்து இனி தேர்ந்தெடுக்கப்படும்  தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் சங்க நிர்வாகிகளை ஆலோசித்து முடிவெடுப்போம்.

சிறிய பட்ஜெட் படங்களை திரையிடுவதற்கும் பிரச்சனைகள் உள்ளன. இவற்றுக்கும் தீர்வு காண்போம்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அரசியல் தலையீடு கிடையாது , கடந்த 10ஆண்டுகளாக  விபிஎப் கட்டணத்தை தயாரிப்பாளர்களே செலுத்தினர். இனி அப்படி செலுத்து முடியாது.

நாங்கள் வெற்றிபெற்றால் நலிந்த மற்றும் மூத்த தயாரிப்பாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முயற்சி எடுப்போம்.

ஓடிடி மாற்றுஏற்பாட்டிற்கான தளம் தான் திரையரங்கம் தான் முக்கியம், இன்றைய சூழலில் ஓடிடி சரியானது, தென்னிந்திய சினிமாவில் கார்ப்பரேட் தலையிட வாய்ப்பில்லை!” என்றார்.

Related Posts