பெரும்பிடுகுமுத்தரையர் சிலைக்கு த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை!
பெரும்பிடுகுமுத்தரையர் சிலைக்கு த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது குறித்து த.வெ.க. சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், பேரரசர் பெரும்பிடுகுமுத்தரையர் அவர்களின் சதய விழாவை முன்னிட்டு இன்று திருச்சியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கழக நிர்வாகிகள் திரு. கரிகாலன், திரு.M.செந்தில், திரு.H.செந்தில், திரு.சுந்தர், திரு.சிவா, திரு.ரவிசங்கர், திரு.லத்தீப், திரு. அருள், திரு.சீனி, திருமதி. துளசி மற்றும் தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் தஞ்சாவூர் திரு.சரவணன், அரியலூர் திரு.சிவா, புதுக்கோட்டை திரு.பர்வேஸ், கரூர் திரு.மதியழகன், திண்டுக்கல் திரு.தர்மா, திரு.தேவா, பெரம்பலூர் திரு.சிவா, நெல்லை திரு.சஜி, சிவகங்கை திரு.முத்து பாரதி, திரு.ஜோசப், மதுரை திரு.பாலாஜி, தஞ்சாவூர் திரு.ஏனாதி மதன், திரு.நிஜாம், திரு.ரமேஷ், திரு.முத்து, விருதுநகர் திரு.செல்வம், திரு.சின்னப்பர், மற்றும் கழக தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.