“மனதில் வலி…!”: ‘பழுவேட்டரையர்’ சரத் குமுறல்!

“மனதில் வலி…!”: ‘பழுவேட்டரையர்’ சரத் குமுறல்!

நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் தெரிவித்ததாவது:

“நான் 40 ஆண்டுகள் இந்த கலை உலகத்தில் பயணித்து வருகிறேன். தற்போது எதிர்மறையான கதாபாத்திரத்தில் அதிகமாக நடிக்கிறேனே  என்று சிலர் கேட்கின்றனர். புதிய தலைமுறையினர் என் படமே பார்க்காம இருந்திருக்கலாம். அவர்களை என் படம் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் செலக்ட் பண்ணி நடிக்கிறேன்.

பொன்னியன் செல்வன் படம் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. அதற்குப் பின்

பின் எனக்கான ரசிகர்கள் அதிகரித்துள்ளதாக சிலர் தெரிவித்தனர். அதற்கு காரணம் மணிரத்னம்தான்.பொன்னியின் செல்வன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. என்னுடைய மகனை பார்ப்பதற்காக நான் சிங்கப்பூர் சென்று வந்தேன். 21ம் தேதி நான் வந்துவிட்டாலும், ஏற்கெனவே அவர்கள் புரோகிரோம் போட்டு கிளம்ப தயாராக இருந்தார்கள்.  ஆகவே கலந்துகொள்ள இயலவில்லை.பொன்னியின் செல்வன் படம் வெளியாகி நான் இன்னும் பார்க்கவில்லை என்னுடைய மனைவி என்னுடன் படத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் எனவே மனைவி மகள்களுடன் சென்று பார்க்க போகிறேன்.என் மனதில் பல்வேறு  வலிகள் உள்ளன. அவற்றை இப்போது வெளிக்காட்ட விரும்பவில்லை. உரிய நேரத்தில்  செய்தியாளர்களை சந்தித்து அவற்றை பகிர்ந்துகொள்வேன்” என்று பேசினார் சரத்குமார்.

 

 

 

Related Posts