நடிகர் நிவின் விவகாரம்: பாலியல் பொய்ப்புகார் கொடுத்தால் தண்டனை என்ன தெரியுமா?

நடிகர் நிவின் விவகாரம்: பாலியல் பொய்ப்புகார் கொடுத்தால் தண்டனை என்ன தெரியுமா?

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் நடிகர் நிவின் பாலி மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். கடந்த டிசம்பர் ஐந்தாம் தேதி,  நிவின் உள்ளிட்ட ஆறுபேர் தன்னை துபாயில் வைத்து பலாத்காரம் செய்ததாக தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.  இதையடுத்து நிவின் உள்ளிட்ட ஆறுபேர் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால் குறிப்பிட்ட நாளில் நிவின் பாலி, கொச்சியில் இருந்ததாக ஆதாரம் வெளியாகி உள்ளது.

( விரிவான செய்தி:   நடிகர் நிவின் மீதான பாலியல் புகாரில் திடீர் திருப்பம்!

குறிப்பிட்ட புகார் பொய் என நிரூபிக்கப்பட்டால், அந்த பெண்ணுக்கு தண்டனை கிடைக்கும். இது குறித்த இரு வழக்குகளைப் பார்ப்போம்.சென்னை கீழ்ப்பாக்கம் ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்த 39 வயதானபெண் ஒருவர், தனியார் ஸ்கேன்சென்டரில் பணிபுரிந்து வந்தார். அவர், தனது கணவர் தங்களது  14 வயது மகளை  பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கடந்த 2018-ம் ஆண்டு புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் அந்தப் பெண்ணின் கணவர்மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை மனைவி சுமத்தியுள்ளதாக வு சென்னை உயர் நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் செய்தார்.  . அந்த வழக்கைவிசாரித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் அழைத்து விசாரித்தபோது, அவருக்கு எந்தவொருபாலியல் சம்பவமும் தந்தையால் நடைபெறவில்லை என்பது ஊர்ஜிதமானது.

அதையடுத்து, கணவருக்குஎதிராக பொய்யான பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய மனைவி மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார், அந்த பெண்ணுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்,ராஜலட்சுமி முன்பாக நடந்தது.

அந்த பெண் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இன்னொரு சம்பவம்..

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில், தன்னை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார் . நீதிமன்ற விசாரணை முடிவில்,  சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த இளைஞர் மேல் முறையீடு செய்தார். வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது. பெண் கொடுத்த புகார் பொய் என உறுதி ஆனது. இதற்குள் அந்த இளைஞர்,  நான்கு ஆண்டுகள், எட்டு மாதங்கள் மற்றும் ஆறு நாட்கள் சிறையில் கழித்து விட்டார்.

இதையடுத்து அதே  கால அளவுக்கு குறிப்பிட்ட பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும்,  ரூ.5.88 லட்சம் அபராதம் விதித்ததுடன், அதை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும்  நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Related Posts