நடிகர் நிவின் மீதான பாலியல் புகாரில் திடீர் திருப்பம்!

நடிகர் நிவின் மீதான பாலியல் புகாரில் திடீர் திருப்பம்!

கடந்த டிசம்பர் 15ம் தேதி, துபாயில் வைத்து நிவின்பாலி உள்ளிட்ட ஆறு பேர் தன்னை பாலியல்  துன்புறுத்தல் செய்ததாக, நடிகை ஒருவர்  குற்றம் சாட்டி இருந்தார்.  இதையடுத்து நிவின் பாலி மீது கேரளாவின் ஊனுக்கல் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் அந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த ‘பார்மா’ எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட நாளில், கொச்சியில் உள்ள பிரபல கிரௌன் பிளாசா ஹோட்டலில் நிவின் பாலி இருந்ததற்கான ஆதாரமும்   வெளியாகி இருக்கிறது.

இது குறித்து நிவின் பாலி, அந்த பெண்ணிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்த சதியின் பின்னணியில் உள்ள நபர்களை வெளியே கொண்டு வர எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் நிவின் பாலி முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related Posts