சமூக நோக்குடன் ஒரு ஹாரர் த்ரில்லர் “நறுவீ”:  ஆகஸ்ட் 29 ரிலீஸ்! 

சமூக நோக்குடன் ஒரு ஹாரர் த்ரில்லர் “நறுவீ”:  ஆகஸ்ட் 29 ரிலீஸ்! 

ஹரீஷ் சினிமாஸ் வழங்கும், தயாரிப்பாளர் A. அழகு பாண்டியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுபாரக் M இயக்கத்தில், மலைவாழ் மக்களின் நலன்களை பற்றிப்பேசும், ஹாரர் திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “நறுவீ”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வேண்டும் என்கிற அக்கறையின் அடிப்படையில், இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் A. அழகு பாண்டியன்.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், சமூக அக்கறை கருத்துக்களுடன், ரொமான்ஸ் காமெடி, கலந்து பரபரப்பான ஹாரர் திரில்லர் படைப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுபாரக் M.

மருத்துவம் படித்து முடித்துவிட்டு, தற்போது சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் ஹரீஷ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் வின்சு, வி.ஜே.பப்பு, பதினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, காதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் சென்னை ஊட்டி குன்னூர் போன்ற இடங்களில் மொத்தம் 60 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள் இல்லாத மலை கிராமங்களில் பெரும் சிரமத்துக்கு இடையே ஒரு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இரவு பகல் பாராமல் படக்குழு பணியாற்றி இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறது.

எஃப் ஐ ஆர் திரைப்படத்தின் மூலம் சிறப்பான இசையை தந்த அஸ்வத், நறுவீ திரைப்படத்திற்கு சிறப்பான இசை பங்களிப்பு செய்திருக்கிறார். இவரின் இசையில் இத்திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழகமெங்கும் திரையரங்க வெளியீடு பாஸ்கர் சினிமா கம்பெனி மற்றும் ஷிவானி ஸ்டூடியோஸ்.

தொழில் நுட்ப குழு விபரம்
எழுத்து, இயக்கம் : சுபாரக் M
தயாரிப்பு நிறுவனம் : ஹரிஷ் சினிமாஸ்
தயாரிப்பு: அழகு பாண்டியன்
இசை: அஸ்வத்
ஒளிப்பதிவு : ஆனந்த் ராஜேந்திரன்
படத்தொகுப்பு : சுர்பார்க் M
கலை: C K சத்திவேல்
பாடல் வரிகள்: புகழேந்தி கோபால், சங்கவி GV
ஆடியோகிராபி: ராயல் ஸ்டுடியோ
ஒலி வடிவமைப்பு: ராயல் ஸ்டுடியோ
DI: ராயல் ஸ்டுடியோ
வண்ணம்: கோகுல்
ஆடை வடிவமைப்பாளர்: பிரியா
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் : வினோத்குமார் டைட்டில் & விளம்பர வடிவமைப்பு : ராஜு
ஸ்டில்ஸ் : ஆனந்த் ராஜ்
மக்கள் தொடர்பு : மணி மதன்