‘மை லார்ட்’: உயிர் வாழப் போராடும் ‘பிணம்’! 14,000 கோடி ரூபாய் கள்ளச்சந்தை!
ஜோக்கர், குக்கூ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் சகவனத்தை ஈர்த்த ராஜூ முருகன், யதார்த்த நாயகன் சசிகுமார் – இந்த இரண்டு பெயர்களே எதிர்பார்ப்பை எகிற வைக்கப் போதுமானது. ஆனால், ‘மை லார்ட்’ படத்தின் டீசர், அந்த எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்தது.
யார் அந்த ‘உயிருள்ள’ பிணம்?
“அரசு ஆவணங்களின்படி நீங்கள் இறந்துவிட்டீர்கள்” – ஒரு சாமானிய மனிதனின் காதில் விழும் இந்த ஒற்றை வரி, அவனது உலகத்தையே தலைகீழாக மாற்றுகிறது. தனது இருப்பை நிரூபிக்க, ஒரு மனிதன் அரசாங்கத்தோடும் அதிகார வர்க்கத்தோடும் நடத்தும் ரத்தமும் சதையுமான போராட்டமே இப்படத்தின் மையக்கரு.
இது வெறும் சினிமாவுக்கான கற்பனை அல்ல; உத்தரப் பிரதேசத்தின் அசம்கர் மாவட்டத்தில் பாபுராம் பால் என்பவருக்கு நேர்ந்த நிஜமான கொடூரம். சொத்துக்காக உறவினர்களே அவரை ‘பிணமாக்க’, தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க அவர் எடுத்த அதிரடி முடிவுகள் தேசத்தையே உலுக்கின. அந்த வலியையும் ஆவேசத்தையும் திரையில் காண ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள்.
நிழல் உலகத்தின் உறுப்பு வேட்டை!
படம் பேசும் இன்னொரு அதிர்ச்சித் தகவல்: சிறுநீரக மாஃபியா. ஏழை மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களின் உடல் உறுப்புகளைக் கிள்ளுக்கீரையாகப் பறிக்கும் மெடிக்கல் மாஃபியாவின் பின்னணியை இப்படம் தோலுரிக்கிறது.
ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்தப் புழக்கம் இருப்பதாக GFI மற்றும் WHO போன்ற அமைப்புகள் தெரிவிக்கின்றன.
மனிதனை வெறும் கறித்துண்டாகப் பார்க்கும் முதலாளித்துவ உலகின் கோர முகத்தை ராஜூ முருகன் எப்படிச் செதுக்கியிருப்பார் என்பதே தற்போதைய ஹாட் டாப்பிக்!
யுத்தத்திற்குத் தயாரா?
நிஜ சம்பவங்களின் வீரியமும், ராஜூ முருகனின் கூர்மையான வசனங்களும், சசிகுமாரின் கனமான நடிப்பும் இணைந்து ஒரு மிரட்டலான அனுபவத்தைக் கொடுக்கப் போவது உறுதி.
நீதிமன்றக் கூண்டில் ஏறப்போகும் உண்மைகளுக்காகவும், காணாமல் போன ஒரு மனிதனின் அடையாளத்திற்காகவும் காத்திருங்கள்.
வரும் 13-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிாயகிறது ‘மை லார்ட்’!
