ராவணா -சீதா: கு.கார்த்தி வரிகளில் ஒரு ராட்சத ஆல்பம்!
பேட்ட, பீஸ்ட் எனத் திரையுலகின் பிரம்மாண்டத் திரைப்படங்களில் முத்திரை பதித்த பாடலாசிரியர் கு.கார்த்திக்கின் வரிகளில், சுரேஷ்ஷர்மாவின் அதிரடி இசையில், இயக்குநர் பரணிசெல்வம் ஒரு காவியத்தையே உருவாக்கி இருக்கிறார்! KM என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சீயானே’ ஆல்பம் பாடல், இசை ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையப்போகிறது.
இதில் வினோத் ராவணனாகவும், சோனியாதாஸ் சீதாவாகவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, குழந்தை நட்சத்திரம் ரிஷ்விகாவின் உணர்ச்சிகரமான நடிப்பு கல் நெஞ்சையும் கரைய வைக்கும் என்பதில் ஐயமில்லை.ஒவ்வொரு கலைஞரும் போட்டிப் போட்டு நடித்து இருப்பதால், இது ஒரு இசைப் பாடல் என்பதைத் தாண்டி, ஒரு முழுநீளத் திரைப்படத்தைப் பார்த்த உணர்வைத் தருகிறது.
சாதி என்பது ஒழிக்கப்படவில்லை, அது மறைக்கப்பட்டு மட்டுமே இருக்கிறது என்ற நிதர்சனத்தை உரக்கச் சொல்லும் இப்பாடல், அடுத்த தலைமுறைக்கு சாதி தேவையற்றது என்ற புரட்சிகரமான சமூகச் சிந்தனையை விதைக்கிறது.
சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாகத் திகழப்போகும் ‘சீயானே’ இந்த மாத இறுதியில் நம் செவிகளையும் சிந்தனையையும் எட்ட வருகிறது!
