மெகா ஸ்டார் குடும்பத்தில் டபுள் டமாக்கா!

மெகா ஸ்டார் குடும்பத்தில் டபுள் டமாக்கா!

தெலுங்குத் திரையுலகின் நட்சத்திரத் தம்பதிகளான ராம் சரண் – உபாசனா ஆகியோருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த இனிய வரவு, ஒட்டுமொத்த மெகா குடும்பத்தையும் உற்சாகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். பிறந்துள்ள இரண்டு குழந்தைகளும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தாய் உபாசனா நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தனது குடும்பத்தின் அடுத்த தலைமுறை வாரிசுகளைக் கண்ட பெருமிதமும் நன்றியும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டது. “மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே இந்தத் தம்பதிக்கு க்ளின் காரா என்ற இரண்டு வயது மகள் இருக்கும் நிலையில், இப்போது இரட்டைக் குழந்தைகளின் வருகை அந்தக் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கியுள்ளது. கோனிடேலா மற்றும் காமினேனி குடும்பங்கள் இந்த இரட்டைச் சந்தோஷத்தைத் திருவிழாவைப் போலக் கொண்டாடி வருகின்றன. திரையுலகப் பிரபலங்கள் முதல் கோடிக்கணக்கான ரசிகர்கள் வரை அனைவரும் இந்த தம்பதிக்குத் தங்களது வாழ்த்துகளை மழையெனப் பொழிந்து வருகின்றனர்.

Related Posts