மோகன் ஜி-யின் ‘பகாசூரன்’: படக்கதை இதுதான்?
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்தவர், மோகன் ஜி.
அவரது புதிய படத்தில், இயக்குனர் செல்வராகவன், நட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்தின் பூஜை சேலம் அருகில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் நடைபெற்றது. படப்பிடிப்பு இன்று (திங்கள்) முதல் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, படத்துக்கு, ‘பகாசுரன்’ என பெயரிட்டுள்ளார் மோகன் ஜி.
பலரைப்போல, ஏதோ ஒரு தலைப்பு என்பது மோகன்ஜி பாணி அல்ல. படத்தின் கதையை உணர்த்தும்படியாகவே, தலைப்பு இருக்கும்.
அந்த வகையில், புதிய படத்துககு பகாசுரன் என பெயரிட்டிருப்பதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பொதுவாக, அதிகமாக சாப்பிடுபவர்களை பகாசுரன் என்று கிண்டலாக அழைப்பது வழக்கம்.ஆனால் மகாபாரத கதையில் வரும் ஒரு கதாபாத்திரம்தான் பகாசுரன்.
இது குறித்த கதையைப் பார்ப்போம்.
‘ஏகசக்கரம் என்ற கிராமத்தை அடுத்த காட்டில் வசித்து வந்த அரக்கன் பகாசுரன், அவனுக்கு பசி எடுக்கும் போது கிராமத்தில் நுழைந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கொன்று சாப்பிட்டு வந்தான்.
இவனது அட்டகாசத்தைக் குறைப்பதற்காக அவனுடன் கிராமத்தினர் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி, மாதம் இரு முறை அவனுக்கு ஒரு வண்டி நிறைய உணவை அனுப்பி வைப்பார்கள். வண்டி உணவு முழுவதும் சாப்பிட்டுவிட்டு, மாடுகளையும், வண்டி ஓட்டி வந்தவனையும் சாப்பிட்டு விடுவான்.
ஒவ்வொரு குடும்பமும் அவனுடையத் தேவைக்காக பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை உணவை கொடுத்து வந்தனர்.
குந்தியும், பாண்டவர்களும் தங்கியிருந்த அரக்கு மாளிகை எரிந்த பிறகு தப்பிப் பழைத்து பஞ்சத்தில் அடிபட்ட பிராமணர்கள் போல வேடமிட்டு ஓரிடத்தில் தங்காமல் காடுகளில் அலைந்து திரிந்தார்கள்.
அப்போது, ஏகசக்கரம் கிராமத்தில் வசித்த பிராமணர் ஒருவர், குந்திக்கும், பாண்டவர்களுக்கும் தங்குவதற்கு உதவி செய்தார்.
ஒரு நாள் இரவு அந்த இளம் பிராமணரின் மனைவி “அந்த அரக்கனுக்கு இந்த முறை நாம் உணவு தரவேண்டும். நீங்கள் இறந்துவிட்டால், எனக்கும் நம் மகளுக்கும் யார் ஆதரவு” என அழுதாள்.
தனக்கு உதவி செய்த பிராமணருக்கு துன்பம் என்று உணர்ந்த குந்தி, “உன் கணவருக்குப் பதிலாக என் பிள்ளைகளில் ஒருவனான பீமன் செல்வான்” என்றாள்.
அதன்படி வண்டி நிறைய உணவுடன் சென்ற பீமன், பகாசுரன் என்ற அந்த அரக்கனை கொன்றான்” என்பதுதான் மகாபாரத கதையில் வரும் ஒரு காட்சி.
‘பிராமணர்ளுக்காக போராடும் பிற்படுத்தப்பட்ட இளைஞனின் கதையாக இப்படம் இருக்கும்’ என்ற யூகம் எழுந்துள்ளது.