“எம்.ஜி.ஆர்., ரஜினி வரிசையில் ‘கள்வன்’ ஜி.வி.பிரகாஷ்!”: இயக்குநர் பேரரசு

“எம்.ஜி.ஆர்., ரஜினி வரிசையில் ‘கள்வன்’ ஜி.வி.பிரகாஷ்!”:   இயக்குநர் பேரரசு

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் பாரதிராஜா நடிக்கும்கள்வன்படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

 விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது, “பாரதிராஜா சார் நடிப்பதற்காக சினிமாவுக்கு வந்து இயக்குநர் இமயம் ஆனவர். என்னைக் கேட்டால், வந்த புதிதில் அவர் நடிக்காமல் போனது நல்ல விஷயம். ஏனெனில், என்னைப் போன்ற பல நபர்கள் சினிமாவுக்கு வருவதற்கு ஊக்கம் கொடுத்தவர் அவர்தான். இயக்குநர் இமயம் நடிகர் இமயமாக இன்னும் உயர வேண்டும்.நடிகை இவானா நடித்தலவ் டுடேரசித்துப் பார்த்தோம்.   பொதுவாக கதாநாயகிகள் பூ, புடவை என்றால்தான் அழகாக இருப்பார்கள். ஆனால்நைட்டியில் பார்க்கும்போது கூட இவானா அழகாகத் தெரிந்தார். ஜிவி பிரகாஷ் இப்போது வெற்றிகரமான கதாநாயகனாக வலம் வருகிறார். நல்ல கதை இருந்தால் புதுமுக இயக்குநருக்கு தயங்காமல் வாய்ப்புக் கொடுக்கிறார்.

கள்வன்படம் யானையை முதன்மையாக வைத்து இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ரஜினி சார், பிரபாஸ், விக்ரம் பிரபு என யானையை வைத்து அவர்கள் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் ஆகி இருக்கிறது. அந்த செண்டிமெண்ட் இந்தப் படத்திற்கும் ஹிட் கொடுக்க வாழ்த்துகள்என்றார்.

Related Posts