துல்கரின் ‘ஏஒடி’: ஃபேமிலி ஆடியன்ஸை வசீகரிக்கப் போகும் திரை விருந்து!
சினிமா உலகில் எப்போதுமே வித்தியாசமான கதைக்களங்களால் ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமரும் பன்முக நாயகன் துல்கர் சல்மான், இப்போது ‘ஏஒடி’ (AOT) படத்தின் மூலம் அகில இந்திய அளவில் பட்டையை கிளப்பத் தயாராகிவிட்டார்! கதாநாயகியை மையமாகக் கொண்ட கதையாக இருந்தாலும், ஒட்டுமொத்தப் படத்தின் தரத்தை நம்பி களமிறங்கும் துல்கரின் இந்தத் தேர்வு, சினிமா ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு தரமான விருந்தாக மாறுகிறது.
தனித்துவமான அணுகுமுறையால் அறியப்படும் இயக்குநர் பவன் சாதினேனி இயக்கத்தில், புகழ்பெற்ற கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் இணைந்து வழங்கும் இப்படத்தை, லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் சிறப்பான பங்களிப்பும், கதாநாயகி சாத்விகா வீரவல்லியின் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற எதார்த்தமான நடிப்பும் படத்திற்கு கூடுதல் மகுடம் சூட்டுகின்றன.
கிராமப்புறத்தின் இயல்பான அழகைக் கண்முன் நிறுத்தும் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்கின் கேமராவும், ரசிகர்களின் மனதை வருடும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் உணர்வுப்பூர்வமான இசையும், ஸ்வேதா சாபு சிரிலின் நேர்த்தியான கலை இயக்கமும் இணைந்து இப்படத்தை வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்கின்றன. படத்தின் டீசரே சமூக வலைதளங்களில் தீயாய் பரவி ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கோலாகலமாக வெளியாகவுள்ள இப்படம், ‘மகாநதி’, ‘சீதா ராமம்’, ‘கல்கி’ வரிசையில் வெற்றிச் கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்தி, வரும் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வலம் வரவுள்ளது!

