பெரிய ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் முக்கிய ஆலோசனை!

பெரிய ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் முக்கிய ஆலோசனை!

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் பாரதிராஜா நடிக்கும்கள்வன்படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “’மரகதநாணயம்’, ‘ராட்சசன்போன்ற ஹிட் படங்களைக் கொடுத்த டெல்லி பாபு தயாரிப்பில்கள்வன்வந்துள்ளது. ஜிவி சார் போல மல்டி டேலண்டட் நபரைப் பார்க்க முடியாது. அவருக்கு மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.

மேக்கிங் சூப்பராக உள்ளது. ’நாச்சியார்’,  ‘லவ் டுடேபோல இவானாவுக்கு இந்தப் படமும் ஹிட் ஆக வேண்டும்” என்றார்.

மேலும் அவர் பேசும்போது, “ மிகப்பெரிய ஹீரோக்கள் வெளி மாநில தயாரிப்பாளர்களுக்கு படம் நடித்துக் கொடுப்பது போல தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்கும் படம் நடிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். அந்த வகையில் புதிய தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்து வரும் ஜிவி பிரகாஷூக்கு வாழ்த்துகள். தமிழ் சினிமா ஜெயிக்க வேண்டும்!”என்றார்.

Related Posts