தேவி ஸ்ரீ பிரசாத்தின் ‘எல்லம்மா’: பான் இண்டியா மியூசிக் டைரக்டர் பான் இண்டியா ஹீரோ ஆகிறார்!

தேவி ஸ்ரீ பிரசாத்தின் ‘எல்லம்மா’: பான் இண்டியா மியூசிக் டைரக்டர் பான் இண்டியா ஹீரோ ஆகிறார்!

பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசை அமைத்து, பான் இண்டியா இசை அமைப்பாளராக விளங்கும் தேவி ஸ்ரீபிரசாத், பாான் இன்டியா திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.  ஏற்கெனவே சில படங்களில் மிகச் சில நிமிடங்கள் தலைகாட்டிய இவர்,  முழு நீள வேடத்தில் நடிப்பது இதுவே முதன் முறை.

அந்தத் திரைப்படம்.. எல்லம்மா.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பலேகம் புகழ் வேணு யெல்தண்டி இயக்கத்தில், தில்ராஜு வழங்கி, சிரிஷ் தயாரிப்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இப்படம் உருவாகி வருகிறது. ஹீரோவாக நடிப்பதோடு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவும் செய்கிறார்.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமான பான் இந்திய வெளியீடாக இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் கோலாகலமாகத் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Posts