‘சட்டமும் நீதியும் 2’ : விமர்சனம் : கோர்ட் ரூம் விறுவிறுப்பு… கொலையா, தற்கொலையா?

‘சட்டமும் நீதியும் 2’ : விமர்சனம் : கோர்ட் ரூம் விறுவிறுப்பு… கொலையா, தற்கொலையா?

சட்டம் ஒரு இருட்டறை… அதில் நியாயம் விளக்கேற்ற வருமா?  என்கிற கேள்வியை எழுப்பி மிரட்டலான திரைக்கதையோடு வந்திருக்கிறது ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் இரண்டாவது சீசன்!

கணவனைப் பறிகொடுத்துவிட்டு நீதி கேட்டு நிற்கும் மாஸ் வக்கீல் சந்திரா, மறுபக்கம் தற்கொலை என சாதிக்கத் துடிக்கும்வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி. கோர்ட் ரூமில் இவர்களுக்கிடையேயான பலப்பரீட்சைதான் இந்த சீரிஸின் அடிநாதம்.

சாதாரண வக்கீலாக வந்து, வழக்கை மாஸாக கையில் எடுத்து எதிர்தரப்பை திணறடிக்கும் சுந்தரமூர்த்தியாக சரவணன் நடிப்பு பட்டையை கிளப்புகிறது. மனைவியிடம் பாவப்பட்ட கணவனாக, சட்ட நுணுக்கத்தில் சீறும் புலியாக இரண்டுவித உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இன்னொரு பக்கம்,  கெத்து குறையாத நடிப்பால் மிரட்டியிருக்கிறார் வரலெஷ்மி சரத்குமார். கணவன் இறந்த சோகத்தை மறைத்துக்கொண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என அவர் காட்டுகிற முனைப்பு அசத்தல்.

இவர்களுடன் பிரேம், கவிதா பாரதி, கல்லூரி வினோத், ஷிவின் என மற்ற கதாபாத்திரங்களும் கதையோட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

விபின் சங்கரின் மிரட்டலான பிஜிஎம் மிகப் பெரும் பலம்.

எஸ். கோகுலகிருஷ்ணனின் கேமரா ரசிக்க வைக்கிறது.

நடந்தது கொலையா அல்லது தற்கொலையா என்ற மர்ம முடிச்சு ஒவ்வொரு எபிசோடிலும்  ஒவ்வொரு முடிச்சாக தொடர,  செம விறுவிறுப்பு. இறுதி வரை குற்றவாளி யார் என்ற யூகிப்பை யாராலும் கணிக்க முடியாத அளவுக்கு இயக்குநர்கள் பாலாஜி செல்வராஜும் பிரதீப் மரியானும் திரைக்கதையை செதுக்கியுள்ளனர்.

கோர்ட் ரூம் டிராமாவில் சலிப்பு தட்டாமல் இருக்க வேண்டும் என்பதில் படக்குழு காட்டியிருக்கும் மெனக்கெடல் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது.

அதோடு, சட்டம் வேறு நீதி வேறு அல்ல… இரண்டும் தண்டவாளங்கள் போன்றது என்பதை உணர்த்தும் முடிவு மிகச் சிறப்பு.

ரேட்டிங்: 3.9 / 5

Related Posts