மெய்யழகன்: நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா?

மெய்யழகன்: நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா?

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள  மெய்யழகன் திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டு உள்ளது.

( இது குறித்த செய்தி:    https://tamilankural.com/meiyazhagan-cut-in-length/   )

நீக்கப்பட்ட காட்சிகள் எவை தெரியுமா?

மெய்யழகன் படத்தை மீண்டும் பார்த்த ரசிகர் எம்.டி.லக்ஷ்மன் கூறியதாவது:

“ஜல்லிக்கட்டு குறித்து கார்த்தி பேசும் காட்சி நீக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீதிவ்யா, மாட்டினை கயிறு போட்டு பிடிக்கிற வரை காட்சி அப்படியே இருக்கும் அதன் பிறகு கார்த்தி, தனது மாட்டினை கருப்பு பிடித்த மாதிரி இருந்தது என்றும் அப்போது ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டார்கள் என்று சொல்லும் காட்சியும் நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல் அதிகாரி காளையை அணைக்கும் காட்சியும் எடுக்கப்பட்டு விட்டது.

அதே போல,  கார்த்தி, மன்னன் சேரலாதன் குறித்து பேசுவதும், இலங்கைப் போர் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பேசுவதும் நீக்கப்பட்டுள்ளது.

தவிர, மூதாதையர் கோயிலுக்கு அரவிந்த் சாமி செல்லும் காட்சியும் கட் செய்யப்பட்டு உள்ளது.

இறுதியாக, தேவதர்ஷினியிடம் அரவிந்த்சாமி, ‘அவன் ரொம்ப அன்பா இருக்கான்’ என்று கார்த்தி  பற்றி சொல்லும் டயலாக்குகள் சில நீக்கப்பட்டு உள்ளன” – இவ்வாறு எம்.டி.லக்ஷ்மன் கூறினார்.

இது குறித்து திரையுலக வட்டாரத்தினர், “இப்போது நீக்கப்பட்ட காட்சிகளுடன்தான் மெய்யழகன் பட தெலுங்கு வெர்சன் வெளியாகி உள்ளது. நமது பாரம்பரியமான ஜல்லிக்கட்டு, ஈழப்பிரச்சினை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு  ஆகியவை தெலுங்கு மக்களுக்கு கன்வே ஆகாது என்பதால் அவை அங்கு இல்லை. தற்போது அதே நீளத்தில் தமிழில் மெய்யழகன் திரையிடப்படுகிறது”  என்றனர்.

 

Related Posts