“மாடலிங் துறையில் பலர் லெஸ்பியன்கள்!” ஸ்ருதி பெரியசாமி
நடிகை நீலிமா இசை தயாரிப்பில், ஷார்ட் ஃபிளிக்ஸ் (செயலி மற்றும் டிஜிட்டல்) தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் திரைப்படம், ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’.
ஜெயராஜ் பழனி இயக்க, ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா முதன்மை கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.
தர்ஷன் குமார் இசையமைக்க, ஜி கே பி மற்றும் சிவா சங்கர் பாடல்களை எழுதி உள்ளனர்.
தன்பாலின ஈர்ப்பாளர்களான இருவரை மையப்படுத்தி உருவாகி உள்ள இப்படம், அவர்களது சுதந்திரத்தையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் நடிகை ஸ்ருதி பெரியசாமி, ”நான் பணியாற்றும் மாடலிங் துறையில் ஏராளமானவர்கள் தங்களுடைய முன்னேற்றத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அதே நேரம் பலர், ‘எல் ஜி பி டி – LGPT’ என்கிற, பிரத்தியேக சமூக குழுவில் இருக்கிறார்கள்.
அதனால் இயக்குநர் எனக்கு கதையை சொன்ன போதே பிடித்திருந்தது. உடனடியாக, நடிக்க ஒப்புக்கொண்டேன்.
‘எல் ஜி பி டி – LGPT’யினரின் சுதந்திரத்தையும் அனைவரும் மதிக்க வேண்டும்” என்றார்.
பின் குறிப்பு: எல் ஜி பி டி LGPT என்றால், தன் பாலின உணர்வார்கள், இரு பாலின விருப்பம் உள்ளவர்கள், பெண் உறுப்புடன் பிறந்து பிறகு ஆணாக உணர்பவர்கள் மற்றும் ஆண் உறுப்புடன் பிறந்து பிறகு பெண்ணாக உணர்பவர்கள் ஆகியோரை குறிக்கும். விரிவாக அறிய கூகுள் இணையத்தை பாருங்கள்.

