“லெஸ்பியன்-கைஸ்களுக்கும் ரெஸ்பெக்ட் கொடுங்க!”: ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ இயக்குநர் ஜெயராஜ் பழனி
நடிகை நீலிமா இசை தயாரிப்பில், ஷார்ட் ஃபிளிக்ஸ் ( செயலி மற்றும் டிஜிட்டல்) தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் திரைப்படம், ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’.
ஜெயராஜ் பழனி இயக்க, ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா முதன்மையான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்கள்.
தர்ஷன் குமார் இசையமைக்க, ஜி கே பி மற்றும் சிவா சங்கர் பாடல்களை எழுதி உள்ளனர்.
தன்பாலின ஈர்ப்பாளர்களான இரு பெண்களை மையப்படுத்தி உருவாகி உள்ள இப்படம், அவர்களLு சுதந்திரத்தையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ஜெயராஜ் பழனி, ”நான், திருநங்கைகளை முதன்மைப்படுத்திய ‘சூல்’ என்ற படைப்பை உருவாக்கினேன். ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ என்னுடைய இரண்டாவது திரைப்படம்” என்றார்.
மேலும், “நான் பாண்டிச்சேரியில் நாடக துறையில் பணியாற்றிருக்கிறேன். என்னுடைய உதவியாளர் ஒருவர் தன் பாலின சேர்க்கையாளர். அவரின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இந்த படைப்பு உருவாக்கினேன். தன்பாலின சேர்க்கையாளர்களின் உணர்வுகளையும் மதித்து, சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை இந்த படைப்பின் நோக்கம் ” என்றார்.
