ஷார்ட் ஃபிளிக்ஸ் தளத்தில் புதியவர்களுக்கு வாய்ப்பு!: பரணிதரன்

ஷார்ட் ஃபிளிக்ஸ் தளத்தில் புதியவர்களுக்கு வாய்ப்பு!: பரணிதரன்

தயாரிப்பு நடிகை நீலிமா இசை தயாரிப்பில், ஷார்ட் ஃபிளிக்ஸ் ( செயலி மற்றும் டிஜிட்டல்) தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதி  வெளியாகும் திரைப்படம், ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’.

ஜெயராஜ் பழனி இயக்கத்தில், ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

தர்ஷன் குமார் இசையமைக்க, ஜி கே பி மற்றும் சிவா சங்கர்  பாடல்களை எழுதி உள்ளனர்.

இப்படம், தன்பாலின ஈர்ப்பாளர்களான இரு பெண்களை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் ஷார்ட் ஃபிளிக்ஸ் பரணிதரன், ” இயக்குநர் இந்த கதையை இயல்பாக சிந்திக்காமல் வித்தியாசமாக சிந்தித்து அளித்து உள்ளார். நடிகை நீலிமா இசை, படத்தை மிக நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்” என்றார்.

மேலும், “எங்களுடைய ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி டிஜிட்டல் தளத்தில் ஏராளமான புதிய இளம் படைப்பாளிகளின் இணைய தொடர்கள், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் விரைவில் வெளியாகும்” என்றார்.

 

 

 

 

Related Posts