சொர்க்கவாசல் திரைப்பட கதை சர்ச்சை!: இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் பதில்!
ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க அறிமுக இயக்குநர் கதை இயக்கத்தில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்துள்ள ‘சொர்க்க வாசல்’ இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
நேற்று செய்தியாளர்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. 1999ல் சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத்தை கண் முன் நிறுத்தும் காட்சிகள் அதிரவைத்தன. படம் பார்த்தவர்கள் பலரும் இயக்குநரை பாராட்டினர்.
இதற்கிடையே, கிருஷ்ணகுமார் என்கிற உதவி இயக்குநர், இப்படத்தின் கதை தன்னுடையது என்றார்.
அவர், “கடந்த 2017இல் என் மீது ஒரு வழக்குத் தொடர்பாக சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டேன். அங்கே கைதிகளிடம் பேசியதில் இருந்து உருவான கதைதான கிளை சிறைச்சாலை.
ட்ரீம் வாரிர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர். பிரபுவுக்கு, கதையை மின்னஞ்சலில் அனுப்பினேன். பிறகு கதை செலக்ட் ஆகவில்லை என பதில் வந்தது.
ஆனால் அந்த கதையை, சொர்க்கவாசல் என்று பெயர் மாற்றி வேறு இயக்குநரை வைத்து தயாரித்துவிட்டார்கள்” என்று சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டார்.
இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சொர்க்கவாசல் பட இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்திடம் tamilankural.com இதழ் சார்பாக பேசினோம்.
அவர், “1999ல் சென்னை பழைய மத்திய சிறையில் நடந்த கலவரம் அனைவரும் அறிந்த விசயம். இது குறித்த செய்திகள் பல நாளிதழ்கள், பருவ இதழ்களில் வெளியாகின. இப்போதும் இக்கலவரம் குறித்த தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
இதை அடிப்படையாக வைத்து நான் புனைந்த கதைதான், சொர்க்கவாசல். இதை இன்னொருர் தனது கதை என சொல்வதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
என் சிந்தனையில் உதித்த கதைதான் சொர்க்கவாசல்” என்று சித்தார் விஸ்வநாத் தெரிவித்தார்.
– டி.வி.சோமு