வீட்டு மனை அபகரித்ததாக பெடரல் வங்கி மீது நடிகர் கோபி புகார்!

வீட்டு மனை அபகரித்ததாக பெடரல் வங்கி மீது நடிகர் கோபி புகார்!

நூறு கோடி இழப்பீடு கேட்டும், பெடரல் வங்கி உரிமத்தை ரத்து செய்யவும் தேசிய நுகர்வோர் ஆணையத்தில் பாஜகவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையத்தின் நிறுவனர், தலைவர், நடிகர் கோபி புகார் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவரது தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:

“பாஜகவை சேர்ந்த திரைப்பட நடிகர் கோபி திரைப்படத்துறையில் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் உள்ளார். மேலும் 2008ம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையத்தின் நிறுவனராகவும், தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். மேலும் ஆர்.எஸ்.ஜி ஏஜென்சிஸ் என்ற தொழில் நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளார்.

ஆர்.எஸ்.ஜி ஏஜென்சிஸ் நிறுவனத்தின் வங்கி கணக்கு இந்தியாவில் கேரளா மாநிலம் ஆளுவா மாவட்டத்தில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பெடரல் வங்கி தனியார் லிமிடெட்டின் கிளை தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சாலை ரங்கர் சன்னதி தெருவில் இயங்கி வருகிறது. அக்கிளையில் ஆர்.எஸ்.ஜி ஏஜென்சிஸ் வியாபார கடன் வங்கி கணக்கு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இருந்த ஆர்.எஸ்.ஜி ஏஜென்சிஸ் வியாபார கடன் கணக்கை குறைந்த வட்டியில் வியாபார கடன் வழங்குவதாக கூறி மேலாளர் ராஜா ஸ்ரீனிவாசன் மூலமாக மாற்றி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கையின் போது தொழில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அப்போதைய மேலாளர் சுவாமிநாதன் 10% அதிகபட்ச கடன் வழங்க மறுத்துள்ளார். அதனால் குடோனில் இருப்பு இருந்த பொருட்கள் பதப்படுத்த முடியாமல் விஷத்தன்மை அடைந்து அளிக்கப்பட்டு கோடி கணக்கில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. வங்கி கணக்கை மேலாளர் சுவாமிநாதன் NPA செய்து சர்பாசி சட்டப்படி கடனை வசூலிக்க மதுரை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

சட்ட விதிகளை மீறி கடன் வசூல் தீர்ப்பாய உத்தரவு பெறாமல் அப்போதைய தலைமை நிர்வாக இயக்குநர் அங்கீகார அதிகாரி ரூப்சந்த் மேலாளர் சுரேஷ் பாபு நில மதிப்பீட்டு பொறியாளர் அருண் அஸோஸியேட்ஸ் சுந்தர்ராஜ் ஆகியோர்கள் கூட்டு சதித்திட்டம் தீட்டி, சட்டவிரோதமாக, மோசடியாக வங்கி நுகர்வோரான நடிகர் கோபியின் பதினான்கு வீடு மனை நிலங்களை நாமக்கல் இணை சார்பதிவாளர் அலுவலகம் மூலமாக சார்பதிவாளர் மு.கீதா முன்னிலையில் நில மதிப்பீட்டு பொறியாளர் சுந்தர்ராஜ் மகன் அருண் விஜய் பெயரில் விற்பனை சான்று ஆவணம் பதிவு செய்து அபகரித்து கொண்டிருக்கிறார்கள்.

கோயம்பத்தூர் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு செய்து மீண்டும் பணம் கேட்டு சம்மன் அனுப்பி இருந்திருக்கின்றனர். பின்பு அப்போதைய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கிடம் பதினான்கு வீடு மனைகளின் நில விற்பனை சான்று மற்றும் மதுரை கடன் வசூல் தீர்ப்பாய வழக்கு தாக்களை மறைத்து, மேலும் உள்ள சொத்தின் மீது அப்போதைய அங்கீகார அதிகாரி உன்னிகிருஷ்ணன், மேலாளர் சுரேஷ் பாபு ஆகியோர்கள் கூட்டு சதித்திட்டம் தீட்டி சட்டவிரோதமாக ஏமாற்றி மோசடியாக பொசிஷன் உத்தரவை பெற்றிருந்திருக்கின்றனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நடிகர் கோபியை அழைத்து விசாரணை செய்யாமல் வழங்கிய உத்தரவை எதிர்த்து கோயம்பத்தூர் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் நடிகர் கோபி வழக்கு பதிவு செய்து முறையிட்டுள்ளார். கடன் வசூல் தீர்ப்பாய தலைமை அதிகாரி பாலசுப்ரமணியம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கிய உத்தரவிற்கு தடை விதிக்க தொகை செலுத்த கூறி தடை உத்தரவு வழங்கி உள்ளார். முதல் தவணை செலுத்தியவுடன் நடிகர் கோபியின் செல்போன் எண்ணிற்கு கணக்கில் நிலுவை தொகை செலுத்த வேண்டும் என பெடரல் வங்கி குறுஞ்செய்தி அனுப்பி உள்ளது.

கடன் வசூல் தீர்ப்பாய தலைமை அதிகாரி பாலசுப்ரமணியதிடம் கூறியபோது நிலுவை தொகையை செலுத்த கூறியுள்ளார். செலுத்தியவுடன் நடிகர் கோபியின் செல்போன் எண்ணிற்கு கணக்கில் இருப்பு தொகை உள்ளதாக பெடரல் வங்கி குறுஞ்செய்தி அனுப்பி உள்ளது. கோயம்பத்தூர் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் தெரிவித்தும் வங்கிக்கு சாதகமாக கடந்த இரண்டரை வருடங்களாக வழக்கை மறுபதிவு செய்தே வருகிறார்கள். வங்கி கணக்கு முடிக்கப்பட்டுள்ள நிலையிலும் தற்போதைய மேலாளர் வெங்கடேசன் மீதமுள்ள சொத்து பத்திரத்தை வழங்காமல் கடன் வசூல் தீர்ப்பாய உத்தரவை சுட்டிக்காட்டி ஏமாற்றி வந்திருக்கிறார்.

அதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வங்கி கணக்கு நிலுவை தொகை முழுவதும் செலுத்தி முடிக்கப்பட்டும் சொத்து பத்திரங்களை திரும்ப வழங்காததால் சொத்து பத்திரங்களை மீட்டு தருமாறு நடிகர் கோபி மனு தாக்கல் செய்திருந்திருக்கிறார்.

அப்போது மேலாளர் வெங்கடேசன் அங்கீகார அதிகாரி தீபக் ஷெனாய் ஆகியோர்கள் கூட்டு சதித்திட்டம் தீட்டி, சட்டவிரோதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலுவை தொகைக்கு மட்டுமே உத்தரவு பெற்றதாகவும் அந்த உத்தரவின் மீது கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் பொய்யான தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்திருக்கிறார்கள்.

அதனால் நீதிபதிகள் சஞ்சய் கங்காபுரவாள பரத் சக்ரவர்த்தி ஆகியோர்கள் கடன் வசூல் தீர்ப்பாயத்தை அணுகுமாறு உத்தரவிட்டிருக்கிறார்கள். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளித்துள்ள தகவலில் பெடரல் வங்கியினர் கூறும் ஆவண பதிவே இல்லை என்ற தகவலை அளித்திருக்கிறார்கள். பெடரல் வங்கி மோசடி குறித்து கடன் வசூல் தீர்ப்பாயம், நீதித்துறை, தமிழக காவல்துறை, பதிவுத்துறை, வருவாய்த்துறை, வங்கித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் நடிகர் கோபி பலமுறை புகாரளித்திருந்திருக்கிறார்.

அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மோசடிக்கு உடந்தையாகவே செயல்பட்டிருந்திருக்கிறார்கள். ஆகையால் பெடரல் வங்கியினர் எவ்வித பயமுமின்றி மோசடிகளை மறைக்க பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு கடந்த எட்டு வருடங்களாக பெடரல்  வங்கி நுகர்வோரான நடிகர் கோபிக்கு பல்வேறு இழப்பை ஏற்படுத்தி பாதிப்படைய செய்து மன உளைச்சல் ஏற்படுத்தி இருந்திருக்கிறார்கள்” என்கிறார்கள்.

இந்நிலையில் கோபி, “பெடரல் வங்கி செய்துள்ள மோசடிகளுக்கான ஆவண ஆதார சாட்சியங்களை தேசிய நுகர்வோர் ஆணையத்தில் வழங்கி பெடரல் வங்கியிடம் நூறு கோடி இழப்பீடு பெற்று தரும்படியும், பெடரல் வங்கி உரிமத்தை ரத்து செய்யவும்  தேசிய நுகர்வோர் ஆணையத்தில் புகார் பதிவு செய்ய உள்ளேன்” என்றார்.

 

Related Posts