அக்., 2ல் ‘கிட்டி’: அகிம்சை நாளில் ஒரு அட்ராசிட்டி மைண்ட் கேம்!!
நெடுமாறன் மோகன்தாஸ் உருவாக்கத்தில், ‘முருகா’ பட புகழ் அசோக் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள உளவியல் சார்ந்த பரபரப்புத் திரைப்படமான ‘கிட்டி’, வருகிற காந்தி ஜெயந்தியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் திருமாறன் தயாரித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் வழக்கமான வணிகப் படங்களுக்கு மத்தியில், நெஞ்சை அல்லும் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட திரைப்படங்கள் அரிதாகவே வருகின்றன. அத்தகைய சுவாரஸ்யமான காட்சிகளை எதிர்பார்க்கும் ரசிகர்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாகக் குற்றப் பின்னணி கதைகளில் குற்றவாளியைத் தேடும் வழக்கமான பாணியை விடுத்து, கதாநாயகனின் நிலையை மையமாகக் கொண்டு வித்தியாசமான முறையில் இதன் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர். இப்படத்தின் ஒவ்வொரு பாத்திரத்தையும், அதற்குரிய நடிகர்களையும் மிகக் கவனமாகத் தேர்வு செய்துள்ளார்.
குறிப்பாக, மனநலம் பாதிக்கப்பட்ட பாத்திரத்தில் அசோக் மிகச் சிறப்பாக நடித்திருப்பதாகவும், இது அவருடைய திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தில் நிஷா, சங்கவி மற்றும் சிமு அத்வானி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ‘ஊமை விழிகள்’ திரைப்பட இயக்குனர் ஆர். அரவிந்த்ராஜ் ஒரு திருப்புமுனையான பாத்திரத்திலும், பிரபல நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் திருமாறன் இதில் காவல் துறை அதிகாரியாகக் களம் இறங்கியுள்ளார். Kumbakonam, Cuddalore, Tharangambadi மற்றும் Chennai ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
-
இசை: காதர்
-
ஒளிப்பதிவு: வி.எஸ். வேலன்
-
படத்தொகுப்பு: கார்த்திக் பாண்டியன்
-
நடனம்: ராக் சங்கர்
-
சண்டைப்பயிற்சி: ‘பாப்புலர்’ பாபு
-
பாடல்கள்: ப்ரியன், சீர்காழி சிற்பி, தமிழ்மகன்
-
கலை இயக்கம்: வாலி
-
செய்தித் தொடர்பு: சரண்
-
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: நெடுமாறன் மோகன்தாஸ்
-
தயாரிப்பு: திருமாறன் (ரியா கிரியேஷன்ஸ்)

