brother: சிஸ்டர் ஆப் ஜெயம் ரவி!

brother: சிஸ்டர் ஆப் ஜெயம் ரவி!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் ‘ப்ரதர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கிறது. ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், ‘கே ஜி எஃப்’, ‘புஷ்பா’ புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘ப்ரதர்’ திரைப்படத்துக்காக ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார்.

‘பிரதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. இந்நிலையில் இன்று இசை வெளியீட்டு விழா நடக்கிறது.

இந்நிலையில் படம் குறித்து பேசிய ஜெயம் ரவி, “நான் பல்வேறு வேடங்களில் பல படங்களில் நடித்து உள்ளேன். இருந்தாலும் ‘ஜெயம்’, ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’, மற்றும் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஆகிய குடும்ப கதையம்சம் உள்ள திரைப்படங்கள் எனது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமானவை. இந்த வரிசையில் ‘பிரதர்’ இணையும் என்பதில் சந்தேகம் இல்லை. இதில் பாசமுள்ள தம்பியாக நடிக்கிறேன்” என்றார்.

Related Posts