“அரசியல் வேண்டாம்!”: ஜெயம் ரவி சொல்லும் காரணம்!

“அரசியல் வேண்டாம்!”: ஜெயம் ரவி சொல்லும் காரணம்!

சாஃப்ட்டான ஹீரோ கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி, அடுத்தடுத்து அதிரடி கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்தார். இந்நிலையில், வரும் தீபாவளிக்கு அவரது பிரதர் திரைப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் அவரிடம், “குடும்பக் கதைகளில் நடிக்கிறீர்கள். அதே நேரம் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் பேராண்மை படத்தில் அரசியல் பேசி நடித்தீர்கள். படமும் சிறப்பாக இருந்தது… அப்படியான படங்களில் நடிப்பதில்லையே” என்று கேட்கப்பட்டது.

அதற்கு ஜெயம் ரவி, “பொழுதுபோக்கு, குடும்ப படங்களில் நடிப்பதற்கே முக்கியத்துவம் அளிக்கிறேன். அதே நேரம் தகுந்த நேரத்தில் அரசியல் படங்களிலும் நடிப்பேன்” என்றார்.

இதைத் தொடர்ந்து அவரிடம், “அரசியல் படங்களில் நடிக்க வேண்டும்.. அரசியலில் ஈடுபட வேண்டும் என்கிற எண்ணம் இல்லையா” என்று கேட்கப்பட, சிரித்துக்கொண்ட பதில் அளித்த ஜெயம் ரவி, “எனக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லை. காரணம்… நடிப்பு, சினிமா தாண்டி எனக்கு எந்தவித எண்ணமும் இல்லை. ஆகவே நோ பாலிடிக்ஸ்!” என்றார்.

Related Posts