‘ஹோப்’: உலகத் தரத்தில் ஒரு குறும்படம்! பிரபலங்கள் வெளியிட்ட பர்ஸ்ட் லுக்!
ராமு கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 30 நிமிட குறும்படமான ‘ஹோப்’ (HOPE), ஒரு முழு நீள திரைப்படத்திற்கு இணையான பிரம்மாண்டத்துடன் உலகத்தரத்தில் தயாராகியுள்ளது!
-
பிரபலங்கள் வெளியீடு: இயக்குநர் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், சசிகுமார், சமுத்திரக்கனி, நித்திலன் சாமிநாதன் உள்ளிட்ட முன்னணி திரையுலகப் பிரபலங்கள் இதன் முதல் பார்வை மற்றும் டிரெய்லரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர்.
-
நட்சத்திரப் பட்டாளம்: ‘நாடோடிகள்’ அபிநயா ஆனந்த், சுரேஷ் கண்ணன் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் முதன்மை வேடங்களில் அசத்தியுள்ளனர்.
-
தேசிய விருது கலைஞர்கள் கூட்டணி: 2022-ல் ‘சவுதி வேலக்கா’ படத்திற்காக தேசிய விருது பெற்ற பாலி பிரான்சிஸ் இசையமைக்க, 2023-ல் தேசிய விருது வென்ற சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் எம் ஒலி வடிவமைப்பு செய்துள்ளனர். கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்ய, இயக்கத்துடன் படத்தொகுப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பையும் ராமு கண்ணனே ஏற்றுள்ளார்.
-
அடுத்த கட்டம் – ஆந்தாலஜி திரைப்படம்: வாழ்க்கையின் எதிர்மறை எண்ணங்களை நம்பிக்கையோடு கடப்பதை மையமாகக் கொண்ட இக்கதை, விரைவில் திரில்லர், நகைச்சுவை, ஆக்ஷன் ஆகிய கதைகளுடன் இணைந்து ஆந்தாலஜி திரைப்படமாக உருவெடுக்கவுள்ளது!
-
திரைவிழா அங்கீகாரம்: ஏற்கனவே சிம்லா மற்றும் கல்கத்தா திரைப்பட விழாக்களுக்குத் தேர்வாகி சாதனை படைத்துள்ளது.
இப்படத்தின் முன்னோட்டத்தை சென்னை கமலா திரையரங்கில் இடைவேளையின் போது கண்டு ரசிக்கலாம்!

