விமர்சனம்: ஹனுமன்

விமர்சனம்: ஹனுமன்

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா அய்யர், வரலக்‌ஷ்மி சரத்குமார், வினய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஹனுமன்.

தெய்வ சக்தி கலந்த சூப்பர் ஹீரோ படம் தான் இந்த ஹனுமான். ஆங்கிலத்தில் (Hanu Man) என வித்தியாசம் காட்டியதற்கு படத்தில் தெளிவான அர்த்தம் உள்ளது.

அஞ்சனாத்ரி என்கிற சின்னஞ்சிறிய ஊரில் வசிக்கும் இளைஞர் ஹனுமந்தா. (தேஜா). இவரது அக்கா அஞ்சம்ம்மா (வரலக்‌ஷ்மி சரத்குமார்).

இதற்கிடையே, தேஜா, அம்ரிதா அய்யருடன் காதல் வசப்படுகிறார். அதோடு கமெடி காட்சிகளும் ஓடுகின்றன.

இன்னொரு பக்கம், சிறு வயதில் இருந்தே சூப்பர் ஹீரோவாக ஆசைப்படுகிறான் வில்லன்.

அவனது நிறைவேறியதா… அவரை ஹீரோ கடவுள் சக்தி கொண்டு எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை.

ஏற்கெனவே, ஆன்மிக சிஜி படமான ஆதிபுருஷ், ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் இந்த ஆன்மிக சிஜி திரைப்படம் ரசிக்க.. வியக்கவைக்கிறது. சிஜி காட்சிகள் ஒவ்வொன்றும் அசத்துகின்றன.

ஹீரோ தேஜா – ஹீரோயின் அம்ரிதா அய்யர்ர ஜோடி ரசிக்கவைக்கிறது. ஹீரோவின் சகோதரியாக நடித்துள்ள வரலக்‌ஷ்மி சரத்குமார், வில்லனாக வரும் வினய் உள்ளிட்டோரின் நடிப்பும் மிரட்டல். படத்தில் வரும் குரங்கு ஒன்றுக்கு ரவி தேஜா குரல் கொடுத்திருப்பது பெரிய பலம்.

சூப்பர் ஹீரோ கதையில் பக்தியை சரியான அளவில் கலந்து சுவாரஸ்யமாக கொடுத்து இருக்கிறார் இயக்குநர். விஷுவல் எஃபெக்ட்ஸ் என அனைத்தும் மிரட்டுகின்றன.

அதிலும், கிளைமேக்ஸில் இடம்பெறும் அந்த 20 நிமிட காட்சிகள் எல்லாமே  அதிரி புதிரியாக மிரட்டுகிறது.

வித்தியாசமான கற்பனை கிராமத்தை கண் முன் நிறுத்திய கலை இயக்குநரை பாராட்டலாம். குறிப்பாக அந்த பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலை, அசரடிக்கிறது.

மொத்தத்தில் ரசிகருக்கு சுவையான பொங்கல் விருந்து, ஹனு மான்.

Related Posts