நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்! திறமைசாலிகளுக்கு சினிமா வாய்ப்பு!  

நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்! திறமைசாலிகளுக்கு சினிமா வாய்ப்பு!  

திரைத்துறையில் முத்திரை பதிக்க ஆசைப்பட்டு, வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் திறமைசாலிகளுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது, ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்..’ நிகழ்ச்சி.

குளோப் நெக்சஸ் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை வழங்குகிறது. இதற்கான போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றால், பெரும் பரிசு அளிக்கப்படுவதோடு அவர்களுக்கு திரை வாய்ப்புகள் வழங்கப்படும்.

நடிப்பு, நடனம், பாடல் என எந்த திறமையாக இருந்தாலும் அதை 30 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவாக  தயாரித்து www.globenexusmedia.com என்ற இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

முதல் பரிசு ரூ.5 லட்சம்,  இரண்டாம் பரிசு ரூ.3 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.2 லட்சம், நான்காம்  பரிசு ரூ.1 லட்சம்.

மேலும் வெற்றியாளர்களுக்கு திரைப்பட வாய்ப்பும் அளிக்கப்படும்.

இதற்காகவே இரண்டு திரைப்படங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன. அவற்றில் ஒன்றை, பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான ஆண்டனி தாசன் இயக்குகிறார். மற்றொரு படத்தை சுகுமாரன் இயக்குகிறார்.

போட்டியில் பங்கேற்பதற்கான பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் மார்ச் 31.  இறுதிப் போட்டி ஏப்ரல் 14 ஆம் தேதி பிரமாண்டமான முறையில் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

மேலும், இப்போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணமாக குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ‘போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் ஆர்வத்தில் பதிவு செய்துவிட்டு பிறகு ஏதோ ஒரு காரணத்தால் அதை சாதாரணமாக விட்டுவிடாமல், இதில் தீவிரமாக செயல்படுவதற்காகவே இந்த சிறு தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது’ என்று நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழாவில்,  குளோப் நெக்சஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் திருமதி. மீனாட்சி அருண், நிகழ்ச்சி மேலாளர் செல்வி.பவித்ரா, பொது மேலாளர் செல்வி.தேவிபிரியா ஸ்டீபன், மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பிரபல பாடகரும், இசையமைப்பாளரும், தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருப்பவருமான அந்தோணி தாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.குளோப் நெக்சஸ் நிறுவனத்தின் மேலாளர் ஜெயபிரகாஷ், “நாங்கள் பிஸினஸ் புரோமோட்டராகவும், சொத்துக்கள் பராமரிப்பு, பொது வர்த்தகம் போன்ற பிசிஸ்களையும்  வெற்றிகரமாக செய்கிறோம். தற்போது மீடியா மேனஜ்மெண்ட் துறையிலும் நுழைந்திருக்கிறோம், இதையும் நாங்கள் சிறப்பாக செய்வோம்”  என்றார்.

அந்தோணி தாசன், “எத்தனையோ பேர், விசில் சத்தம் மற்றும் கைதட்டல் தனக்கும் கிடைக்காதா என்று பலர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள், அப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தை போக்குகின்ற ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைய இருக்கிறது” என்றார்.

Related Posts