ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட “சிட்டா” ஃபர்ஸ்ட் லுக்! கிராமத்து பின்னணியில் நகைச்சுவை விருந்து!
கிராமத்து வாழ்வியலையும், அங்குள்ள நிர்வாக அமைப்புகளையும் மையமாகக் கொண்டு, நகைச்சுவையோடு சிந்திக்க வைக்கும் பாணியில் உருவாகியுள்ள “சிட்டா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ‘விருத்தாச்சலம்’ படத்தை தயாரித்த லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் சார்பாக செந்தில்முருகன் தனது இரண்டாவது தயாரிப்பாக இப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். ‘சூரன்’ திரைப்படத்தை இயக்கிய பாலு நாராயணன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்கள்:
-
நாயகன் சிபி: துடிப்பான கிராமத்து இளைஞனாகக் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.
-
ஆதியா பிரசாத்: ‘பன் பட்டர் ஜாம்’ புகழ் ஆதியா பிரசாத், கிராம நிர்வாக அலுவலர் (VAO) கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்துள்ளார்.
-
ஆராத்யா சாய்: ‘வாழ – 2’ புகழ் ஆராத்யா சாய், கதாநாயகியாக வெகுளித்தனமான கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமாகிறார்.
-
பாலசரவணன்: கிராமத்து தலையாறியாகவே மாறி கலகலப்பூட்டியுள்ளார்.
-
இயக்குநர் மூர்த்தி & மதுமிதா: கிராமத்து அரசியல்வாதியாகவும் அவரது மனைவியாகவும் தோன்றி, ஓர் அசல் கிராமத்து அரசியல் குடும்பத்தை கண்முன்னே கொண்டு வந்துள்ளனர்.
-
அருவி மதன்: சத்தமின்றி அமைதியான வில்லனாக மிரட்டியுள்ளார்.
-
இவர்களுடன் செந்தில் முருகன், சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முன்னணித் தொழில்நுட்பக் கலைஞர்கள்:
-
ஒளிப்பதிவு: நூற்றுக்கணக்கான விளம்பரப் படங்களை ஒளிப்பதிவு செய்த வாசுதேவன்.
-
இசை: ‘ஒரு குப்பை கதை’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘த்ரிஷியம் 2’, ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படங்களின் இசையமைப்பாளர் DC.
-
பாடல்கள்: பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன்.
-
எடிட்டிங்: பிரபல எடிட்டர் V.T. விஜயனின் உதவியாளர் R.K. வினோத் கண்ணா.
-
கலை: R. மனோ | நடனம்: ராதிகா | ஸ்டண்ட்: கார்த்திக்வர்மன்.
-
மக்கள் தொடர்பு: புவன்செல்வராஜ் | தயாரிப்பு நிர்வாகம்: நரசிம்மன்.
-
ஸ்டில்ஸ்: பாவை வின்செண்ட் | டிசைன்: G. நந்தகுமார்.
“ஒவ்வொரு சாமானியனின் கதையும் இதுதான்!” – இயக்குநர் பாலு நாராயணன் உற்சாகம்!
படம் குறித்து இயக்குநர் பாலு நாராயணன் பேசுகையில்:
“ஒரு கிராமத்தைச் சுழன்று இயங்கும் ‘கிராம நிர்வாக அலுவலகம்’ (VAO Office) மற்றும் அதைச் சுற்றி நடக்கும் யதார்த்த சம்பவங்களின் தொகுப்புதான் இந்த ‘சிட்டா’. நம் நாட்டில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் முதல் நில ஆவணங்கள் வரை VAO அலுவலகத்தை அணுகாமல் யாரும் வாழ முடியாது.
ஒரு கிராம நிர்வாகம் கெட்டால் ஒன்றிய, மாவட்ட, ஏன் மாநில நிர்வாகமே பாதிக்கப்படும் என்ற முக்கியக் கருத்தை மையமாகக் கொண்டு, நகைச்சுவை கலந்து திரைக்கதை அமைத்துள்ளோம். ஒரு சாமானிய மனிதன் தனது பட்டா, சிட்டா, அடங்கல் வாங்க சந்திக்கும் சவால்களையும் வாழ்வியலையும் இதில் பதிவு செய்திருக்கிறோம். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ‘இது நம்ம ஊர்ல நடக்குற விஷயம் ஆச்சே!’ என்று நிச்சயம் உணர்வார்கள்.”
தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அடுத்தடுத்த அறிவிப்புகளுடன் “சிட்டா” திரைப்படம் விரைவில் வெள்ளித்திரைக்கு வரவுள்ளது!

